மல்லாங்கிணறில் வளர்ச்சிப்பணி ஆய்வு

Thursday, 09 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி           09.01.2014

மல்லாங்கிணறில் வளர்ச்சிப்பணி ஆய்வு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலையினை பேரூராட்சி தலைவர் நாகையா புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

   மல்லாங்கிணர் 14ஆவது வார்டு காந்திநகரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ. 25 லட்சம் செலவில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேரூராட்சித் தலைவர் நாகையா, துணைத் தலைவர் மணிராஜ், செயல் அலுவலர் மாலா, உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், பணி ஆய்வாளர் சமுத்திரக்கனி ஆகியோர் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  பின்னர் செயல் அலுவலர் மாலா கூறியதாவது: மல்லாங்கிணறில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 10, 12, 14-வது வார்டுகளில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. ரூ.10 லட்சம் செலவில் ஊரணிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10 லட்சம் செலவில் காந்தி மைதானம், முடியனூர் விலக்கு ஆகிய இடங்களில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது. மேலும், மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், பேரூராட்சிகளின் இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கும் பேரூராட்சி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.