அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Friday, 10 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி           10.01.2014

அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

அக்காமலை செக்டேம் பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கும் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

வால்பாறை நகராட்சி மூலமாக சமீபகாலமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பிரேமா புதன்கிழமை, வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின், வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட்டில் உள்ள அக்காமலை தடுப்பணை பகுதிக்கு சென்ற அவர், அங்கு ரூ.42 மதிப்பீட்டில் நடைபெற உள்ள தடுப்பணை தூர்வாருதல் மற்றும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், சோலையார் அணைப் பகுதிக்கு சென்று, அங்கு புதிதாக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி மண்டலப் பொறியாளர் திருமாவளவன், ஆணையாளர் வெங்கடாசலம், நகராட்சித் தலைவர் சத்தியவாணிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.