கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் திட்டப்பணிகள் கூட்டத்தில் தீர்மானம்

Friday, 28 August 2009 12:46 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

மாலை மலர் 28.08.2009

கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் திட்டப்பணிகள் கூட்டத்தில் தீர்மானம்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செல்லம்மாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வளர்மதி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்று பேசினார். உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

பேரூராட்சிக்கு ஒரு பவர் டிரில்லர் ரூ.2.50 லட்சத்தில் வாங்கவும், சொக்கலிங்கம் புதூரில் ரூ.8 லட்சத்தில் தார் சாலை அமைக்கவும்.

ரூ.1.79 லட்சத்தில் ரெட்டியார்பட்டி புதுகாலணியில் சிமிண்ட் சாலை அமைக்கவும். மணியகாரண்பட்டியில் ரூ.1 லட்சம் செலவில் சிமிண்ட் சாலை, வடிகால் அமைக்கவும்.

கன்னிவாடி, சிரங்காடு பகுதியை ஆத்தூர் தாலுகாவில் இருந்து பிரித்து திண்டுக்கல் தாலுகாவில் சேர்க்க வேண்டும் எனவும். அச்சம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு கணபதி நகர் என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய வீடுகட்ட அனுமதி பெறுபவர்கள் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அவசியம் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் விவாதம் நடந்தத.