தூத்துக்குடி மாநகராட்சியில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது

Wednesday, 12 June 2013 07:19 administrator நாளிதழ்௧ள் - பொ௫ளாதார வளர்ச்சி
Print
தினத்தந்தி         12.06.2013

தூத்துக்குடி மாநகராட்சியில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

கணக்கெடுப்பு பணி

நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் வகையில் மத்திய, மாநில அரசால் 6–வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 411 கணக்கெடுப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கிறது. இதற்காக 134 கணக்கெடுப்பாளர்கள், 72 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு பணியாளர்கள் நேற்று காலை மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி வீட்டில் விவரங்களை சேகரித்து பதிவு செய்தனர். அப்போது புள்ளியியல் துணை இயக்குனர் எஸ்.முருகன், உதவி இயக்குனர் எஸ்.பரமசிவன், ஆய்வாளர் அ.சுடலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

வருமானத்தை கேட்க கூடாது

இது குறித்து புள்ளியியல் துணை இயக்குனர் எஸ்.முருகன் கூறும் போது, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படும் தொழில் நடவடிக்கைகள் சேகரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுக்கு அளிக்கப்பட உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட இந்த கணக்கெடுப்பு உதவுவதால் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் சரியான விவரங்கள் அளிக்க வேண்டும். மேலும் வருமானம் குறித்து கணக்கெடுப்பாளர்கள் விவரம் அளிப்பவர்களிடம் கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்று புள்ளியியல் துணை இயக்குனர் எஸ்.முருகன் தெரிவித்து உள்ளார்.