பொருளாதார வளர்ச்சியில் 2015ல் இந்தியா முதலிடம்

Wednesday, 18 August 2010 07:56 administrator நாளிதழ்௧ள் - பொ௫ளாதார வளர்ச்சி
Print

தினகரன் 18.08.2010

பொருளாதார வளர்ச்சியில் 2015ல் இந்தியா முதலிடம்

புதுடெல்லி, ஆக. 18: பொருளாதார வளர்ச்சியில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகிலேயே இந்தியா முதலிடம் பிடிக்கும் என மார்கன் ஸ்டான்லி ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இதுகுறித்து நிதி மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லியின் ஆசியா, இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனரும், பொருளாதார நிபுணருமான சேத்தன் அயா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

உலகமயமாதல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, அடுத்து வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும். 2013 முதல் 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சி 9 முதல் 9.5 சதவீதத்தை தொடும்.

இதன்மூலம், சீனாவை அது முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளி விடும். 2012ல் சீனா பொருளாதார வளர்ச்சி இப்போதுள்ள 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்துள்ள நடுத்தர வயது பிரிவினர், இளைஞர்களால் மனித சக்தி உயர்ந்து வருகிறது. வேலைக்கான வயதினர் அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவதுடன் பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. இதனால், வேலைக்கு போகாத வயதினர் (குழந்தைகள், முதியவர்கள்) எண்ணிக்கை குறைகிறது.

அடுத்தவரை சார்ந்து வாழும் பிரிவினர் எண்ணிக்கை சரிவால், நாட்டின் உற்பத்தி, வருமானம் அதிகரித்து பொருளாதார முன்னேற்றம் விரைவாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயரும். இதுதான் அடுத்த சில ஆண்டுகளில் உலகிலேயே இந்தியா முதலிடம் பெற இருப்பதற்கு காரணம்.