மாநகராட்சி சார்பில் இலவச கணினிப் பயிற்சி

Wednesday, 27 March 2013 10:20 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print
தினமணி      27.03.2013

மாநகராட்சி சார்பில் இலவச கணினிப் பயிற்சி


ஈரோடு மாநகராட்சி சார்பில் இலவச கணினிப் பயிற்சி பெற விரும்பும் பயனாளிகளுக்கான தேர்வு முகாம், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

ஈரோடு மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆண்கள், பெண்களுக்கான இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கம்ப்யூட்டர் அனிமேஷன் மல்டிமீடியா, எம்.எஸ்.ஆபீஸ், இன்டர்நெட், டேலி, டி.டி.பி, பேஷன் டிசைனிங் ஆகிய பயிற்சிகள் நகரின் முக்கிய பயிற்சி நிறுவனங்கள் மூலமாக அளிக்கப்பட உள்ளன.

பேஷன் டிசைனிங் பயிற்சிக்கு 5-ஆம் வகுப்பும், மற்ற பயிற்சிகளுக்கு 8-ஆம் வகுப்பும் குறைந்தபட்ச கல்வித் தகுதி. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்.

இந்த இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கான சிறப்புத் தேர்வு முகாம், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். பயிற்சி தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பம் அளிக்கலாம்.