இலவச கணினி பயிற்சிக்கு நேர்காணல்

Wednesday, 27 March 2013 09:50 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print
தினமணி                    27.03.2013

இலவச கணினி பயிற்சிக்கு நேர்காணல்


கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள மார்ச் 27, 28-ல் நேர்காணல் நடைபெறும் என நகராட்சி ஆணையர் முஹம்மது முகைதீன் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேர விரும்புவோருக்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர்மன்றக் கூட்ட அரங்கில் மார்ச் 27, 28-ல் நேர்காணல் நடைபெற உள்ளது.

18 வயது முதல் 35 வயதிற்குள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, எஸ்எஸ்எல்சி,பிளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற இருபாலரும் பங்கேற்கலாம்.

கல்வி, மதிப்பெண், ஜாதிச் சான்றிதழ், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அட்டை நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்கேற்கலாம் என்று கூறினார்.