ராயப்பேட்டையில் மது அடிமைகள் மறுவாழ்வுக்கு ரூ25 லட்சத்தில் சிகிச்சை மையம்

Tuesday, 07 September 2010 06:19 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினகரன் 07.09.2010

ராயப்பேட்டையில் மது அடிமைகள் மறுவாழ்வுக்கு ரூ25 லட்சத்தில் சிகிச்சை மையம்

சென்னை, செப். 7: மது பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ராயப்பேட்டை மாநகராட்சி நலவாழ்வு மையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை மாநகராட்சி சுகாதாரத் துறையும், தனியார் மருத்துவமனையும் இணைந்து மேற்கொண்டுள்ளன. இந்த பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ரூ25 லட்சம் மதிப்பில் ராயப்பேட்டையில் 20 படுக்கைகளுடன், ஆய்வகம், மருத்துவமனைக்கூடம், மருத்துவ ஆலோசகர் அறை, மருத்துவர் அறை என பல்வேறு வசதிகளுடன் சிகிச்சை மையம் துவங்கப்பட உள்ளது.

இந்த மையத்தின் மூலம் பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் உட்பட அனைவரும் பயன் பெறுவார்கள். மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள், சமூகநல உதவியாளர்கள், பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இந்த நவீன மருத்துவமனையை துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஒரு மாதத்தில் திறந்து வைப்பார். இவ்வாறு மேயர் கூறினார். துணை முதல்வர் திறக்கிறார் .