குடிசைகளை விற்பனை செய்யும் அதிகாரம் வழங்க வேண்டும் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

Friday, 20 August 2010 07:31 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினகரன் 20.08.2010

குடிசைகளை விற்பனை செய்யும் அதிகாரம் வழங்க வேண்டும் எம்.எல்..க்கள் கோரிக்கை

மும்பை,ஆக.20: மும்பையில் குடிசைகளை விற்பனை செய்வதற்கு இருக்கும் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று எம்.எல்..க்கள், முதல்வர் அசோக் சவானிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தாராவி மற்றும் விமான நிலையத்தை ஒட்டிய பகுதி யில் இருக்கும் ஆயிரக் கணக்கான குடிசைகளை கணக்கெடுப்பு நடத்தியதில் அவற்றில் பெரும்பாலான குடிசைகள் 1995ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாக இருந்தாலும் அவற்றை பலர் விற்பனை செய்துள்ளனர். புதிதாக ஒருவர் குடிசை களை விலைக்கு வாங்கி இருந்தால் அவர் குடிசை புனரமைப்பு திட்டத்தின் கீழ் மாற்று வீடு பெற தகுதியற்றவராகவே கருதப்படுகிறார். புதிதாக குடிசைகளை வாங்கியவர் மராத்தியராக இருந்தாலும் அவரும் குடிசை புனர மைப்பு திட்டத்தின் பயன்பெற முடியாமல்து. இதனால் தான் தாராவி குடிசை புனரமைப்பு திட்டம் கிடப்பில் இருந்து வருகிறது. சட்டப்படி 1995ம் ஆண்டு வரை கட்டப்பட்ட குடிசைகளுக்கு மாற்று வீடு வழங்கப்படுகிறது.

இதனை 2000ம் ஆண்டு வரை நீட்டித்து சில இடங்களில் குடிசைவாசி களுக்கு மாற்று வீடு கொடுக் கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு விதிப்படி குடிசைகள் 1995ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு அதனை ஒருவர் விலைக்கு வாங்கி இருந்தால் அதற்கு குடிசை மாற்று திட்டத்தில் மாற்று வீடு கிடைக்காது.

இப்பிரச்னை குறித்து எம்.எல்..க்கள் சிலர் முதல்வர் அசோக்சவானை சந்தித்து பேசினர். அவர்கள், குடிசைவாசிகள் தங்களது வீடுகளை விற்பனை செய்யும் அதிகாரத்தை அரசு வழங்கவேண்டும் என்றும் குடிசைகளை புதிதாக விலைக்கு வாங்கு பவர்களுக்கும் குடிசை மாற்று திட்டதில் மாற்று வீடு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண் டனர். இது தொடர்பாக அரசின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் முதல்வரிடம் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு முதல்வர் அசோக் சவான் உடனே ஒப்புதல் கொடுக்க மறுத்து விட்டார். இது குறித்து விரிவாக விவாதித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப் படும் என்று அவர் தெரிவித் துள்ளார்.

Last Updated on Friday, 20 August 2010 07:32