நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு பற்றி மதிப்பீடு

Thursday, 12 August 2010 07:09 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினகரன் 12.08.2010

நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு பற்றி மதிப்பீடு

மும்பை, ஆக. 12: மும்பை யில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு பற்றி மதிப்பீடு செய்ய எம்.எம்.ஆர்.டி.ஏ முடிவு செய்துள் ளது.

பொருளாதார வளர்ச்சி நிறைந்த நகரமாக மும்பை இருந்தாலும் கூட இங்கு வசிக்கும் மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரின் வாழ்க்கை தரம் வளர்ச்சி அடைந்ததாக இல்லை. இதனால் மும்பை பெருநகர பிராந்தியத்தில் மனிதவள மேம்பாடு எவ்வாறு இருக் கிறது என்பதை மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சி ஆணை யம்(எம்.எம்.ஆர்.டி.) மதிப்பீடு செய்து அறிக்கை ஒன்றை தயாரிக்க உள்ளது.

இது பற்றி எம்.எம்.ஆர்.டி.ஏ கமிஷனர் ரத்னா கர் கெய்க்வாட் நேற்று கூறியதாவது:

மனிதவள மேம்பாடு பற்றி மதிப்பீடு செய்து அறிக்கை தயாரிக்க முக்கிய கமிட்டி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் தற்போது நாங்கள் ஈடுபட்டுள் ளோம்.

பிறப்பு, கல்வி, எழுத்தறிவு மற்றும் மக்களின் வாங்கும் திறன் ஆகிய அம்சங்கள் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படும். உண்மை நிலையை கருத்தில் கொண்டு, நீடித்து நிற்கும் மற்றும் சமச்சீரான வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

வளர்ச்சி என்பது பொரு ளாதார மேம்பாட்டை மட்டும் பிரதிபலிப்பதாக இருக்க கூடாது. மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம் பட்டதாக இருக்க வேண்டி யது அவசியம். எனவே இந்த மதிப்பீட்டை நடத்தினால் முதலீடு திட்டங்களை மறுஆய்வு செய்து எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடை யாளம் காணமுடியும்.

மும்பை பெருநகர பிராந்தியத்தை மேலும் சிறந்ததாக்க திட்டமிட இந்த மனிதவள மேம்பாடு அறிக்கை ஒரு முக்கிய கருவியாக இருக்கும். இவ் வாறு அவர் கூறினார்.