Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Agriculture

"மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர செப். 9 இறுதி நாள்'

Print PDF

தினமணி 19.08.2010

"மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர செப். 9 இறுதி நாள்'

தஞ்சாவூர், ஆக. 18: செப். 9-ம் தேதிக்குள் மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவன தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. பழனியப்பன் விடுத்த செய்திக் குறிப்பு:

காப்பீட்டு நிறுவனம் சம்பா-தாளடி பட்டத்தில் மழைக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 418 விவசாயிகள் பங்கேற்று ரூ. 8 லட்சம் பிரிமியம் செலுத்தி ரூ. 28 லட்சம் இழப்பீட்டுத் தொகை பெற்றனர்.

இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் அதன் எல்லையில் நிறுவப்பட்டுள்ள மழை மானியில் குறிப்பிட்ட காலத்தில் பெய்கிற மழையளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 25 முதல் டிசம்பர் இறுதி வரை உள்ள காலத்தில் விதைப்பு, பயிர் வளர்ச்சி, முதிர்ச்சி, அறுவடை ஆகிய பருவங்களில் ஒவ்வொரு பருவத்திலும் சாதாரணமாக பெய்ய வேண்டிய மழை அளவை வைத்து, அதற்கு குறைவாகப் பெய்திருந்தால் குறைகின்ற ஒவ்வொரு மில்லி மீட்டருக்கும் தொகை கணக்கிடப்படும்.

அதேபோல, செப்டம்பர் முதல் பிப். 10 வரை பெய்திருக்க வேண்டிய மழை அளவைவிட, கூடுதலாக பெய்திருந்தால் அதற்கும் இழப்பீடு கணக்கிடப்படும். இதுதவிர, செப்டம்பர் முதல் நவம்பர் வரை தொடர் வறட்சி தென்பட்டால் அதற்கும் இழப்பீடு கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் சேர இதற்காக நியமிக்கப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார முகவர்கள் வாயிலாக மட்டுமே பிரிமியம் பெறப்படும்.

பிரிமியம் தொகை: தஞ்சை, திருவையாறு ரூ| 552, பூதலூர் | ரூ607, பாபநாசம், திருப்பனந்தாள், பட்டுக்கோட்டை |ரூ 474, திருவிடைமருதூர், கும்பகோணம் ரூ| 430, அம்மாப்பேட்டை | ரூ552, ஒரத்தநாடு, திருவோணம் ரூ| 529, மதுக்கூர் ரூ| 458, பேராவூரணி, சேதுபவாசத்திரம் ரூ| 629. இதற்கான விண்ணப்பப் படிவங்களை முகவர்களிடம் பெற்று, நிறைவு செய்து கணினி சிட்டா அல்லது சிட்டா அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து பிரிமியத் தொகையை அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட், சென்னை என வரைவோலையாக எடுத்து முகவர்களிடம் தர வேண்டும். முகவர்களின் தொடர்பு எண்களைப் பெற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. பழனியப்பனை 94437 80661 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

விவசாயிகளுக்கான மழை காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்த அழைப்பு

Print PDF

தினகரன் 17.08.2010

விவசாயிகளுக்கான மழை காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்த அழைப்பு

திருவாரூர், ஆக. 17: மத்திய அரசின் வர்ஷ பீமா மழை காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்ரி இன்சூரன்ஸ் நிறுவன கார்ப்பரேட் அதி காரி அப்துல் சலாம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் வர்ஷ பீமா மழை காப்பீட்டு திட்டத்தில் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் பங்குபெறலாம். ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து பிரீமிய தொகையை ..சி ஆப் இந்தியா லிமிடெட்என்ற முகவரிக்கு டி.டி எடுத்து அனுப்பி இத்திட்டத்தில் சேரலாம்.

ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரீமிய தொகை தாலுகா வாரியாக: திருவாரூர் ரூ.469. வலங்கைமான் ரூ.529. நீடாமங்கலம் ரூ.474. மன்னார்குடி ரூ.529. கோட்டூர் ரூ.596. திருத்துறைப்பூண்டி ரூ.596. குடவாசல் ரூ.634. கொரடாச்சேரி ரூ.397. நன்னிலம் ரூ.574. முத்துப்பேட்டை ரூ.518. நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் ரூ.507. குத்தாலம் ரூ.485. சீர்காழி ரூ.507. செம்பனார்கோவில் ரூ.485. மயிலாடுதுறை ரூ.485. நாகப்பட்டினம் ரூ.557. கீழ்வேளூர் ரூ.518. கீழையூர் ரூ.552. தலைஞாயிறு ரூ.529. வேதாரண்யம் ரூ.552. திருமருகல் ரூ.557. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ரூ.474. மதுக்கூர் ரூ.458. ஒரத்தநாடு ரூ.529. மேலும் விவரமறிய 04366&250242, 94437 27240 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

மணம் வீசும் மலர்கள் செடி நடப்படும் குப்பைமேடுகளில் வனவிழா

Print PDF

தினகரன் 23.07.2010

மணம் வீசும் மலர்கள் செடி நடப்படும் குப்பைமேடுகளில் வனவிழா

புதுடெல்லி, ஜூலை 23: அடுத்த முறை குப்பைமேடுகளை தாண்டி செல்லும்போது, மூக்கை பொத்திக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், குப்பைமேடுகளை சுற்றிலும் மணம் வீசும் மற்றும் மனதை கவரும் வண்ண மலர்ச்செடிகளை நடவு செய்யும் வனவிழாவை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

டெல்லியைச் சுற்றி பல்வேறு இடங்களில் குப்பைமேடுகள் உள்ளன. இந்த இடத்திலும் மற்றும் அதனை காலி பகுதிகளிலும் மணம் வீசும் மற்றும் வண்ண மலர்ச்செடிகளை நட மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக குப்பைமேடு பகுதிகளில் செடிகளை நடும் வகையில் மண்ணை தோண்டும் பணி தொடங்கப்பட்டது.

காஜிப்பூர், பால்ஸ்வா மற்றும் ஓக்லா ஆகியவற்றில் உள்ள குப்பைமேடு பகுதிகளை தாண்டிச் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கக்கூடிய நிலை இருக்காது. செடிகள் வளர்ந்து நிற்கும்போது அந்தப்பகுதிகளில் நல்ல மணம் வீசுவதுடன், பார்ப்பதற்கு பசுமையாகவும் இருக்கும். செடிகளுக்கு குப்பைகள் நல்ல உரம் என்பதால், அவை சிறப்பாக வளரும்.

பால்ஸ்வாவில் ஜி.டி.கர்னால் பைபாஸ் சாலையில் உள்ள குப்பைமேட்டில் முதல் முறையாக வனவிழா நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டில் குப்பைமேடுகளைச் சுற்றிலும் 2 லட்சம் மரக்கன்றுகள் வரை நடப்பட உள்ளன. மாநகராட்சி நிலைக் குழு குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறியதாவது:

குப்பைமேடுகளில் மணம் வீசும் மலர்களை நடுவதால், முதலில் துர்நாற்றம் குறைவதுடன், குப்பைமேடுகளின் தோற்றமும் அழகாக மாறிவிடும். ஏற்கனவே நிரம்பிவிட்ட குப்பைமேடுகளிலும் மரங்கள் வளர்க்கப்படும். இதனால் அவற்றின் தோற்றமே மாறிவிடும்" என்றார்.

மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா கூறுகை யில், புதிதாக பாதாள வாகன நிறுத்தங்களை கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் நில த்தை தோண்டும் பணி நட ந்து வருகிறது. அங்கு அள்ளப்படும் மணல், குப்பைமேடுகளில் செடிகளை நடுவதற்கு பயன்படுத்தப்படும்.

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி 2012ம் ஆண்டில் இருந்து தொடங்கப்படும். காஜிப்பூர், பால்ஸ்வா, ஓக்லா குப்பைமேடுகளில் இந்த பணிகள் தொடங்கப்படும். மின்சார தயாரிப்புக்கு பின் மிச்சமாகும் மணமற்ற குப்பைகள் பாதி சுரங்கப்பகுதியில் கொட்டப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

மாநகராட்சியின் தோட்டக் குழு தலைவர் சவீதா குப்தா கூறுகையில், "பால்ஸ்வாவில் 4,600 செடிகளும், காஜிப்பூரில் 5,500 செடிகளும், குமன்ஹெராவில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் 4,200 செடிகளும், நரேலா & பாவனாவில் 5,500 செடிகளும் நடப்பட்டுள்ளது" என்றார்.

 


Page 3 of 7