Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Agriculture

திரேஸ்புரம் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ரூ.5 கோடி

Print PDF

தினமணி 30.09.2009

திரேஸ்புரம் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ரூ.5 கோடி

தூத்துக்குடி, செப். 29: தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த தமிழக அரசு ரூ.5 கோடி அனுமதித்திருப்பதாக, மாநில சமூகநலத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழக அரசின் மீன்வளத் துறை "அசைடு' திட்டத்தின் மூலம் திரேஸ்புரம் கடற்கரையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன அறை, பனிக்கட்டியை உடைக்கும் இயந்திரம், குளிர்பதன போக்குவரத்து வாகனம் மற்றும் மீன்விற்பனை நிலையங்கள் போன்றவை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் குளிர்பதன அறை கட்டும் பணி தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மூலம் முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குளிர்பதன அறையைத் திறந்துவைத்து, பனிக் கட்டிகளை உடைக்கும் இயந்திரத்தை இயக்கிவைத்து அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:

இந்த குளிர்பதன அறையைப் பராமரிக்கும் பொறுப்பு நாட்டுப்படகு மீனவர் சங்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் வருமானம் உயர்ந்து, வாழ்க்கைத் தரமும் உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 5 கடற்கரை மாவட்டங்களில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 2007-08-ம் ஆண்டிற்கான நிவாரண தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. அந்த தொகை தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 8,754 மீனவ மகளிருக்கு மொத்தம் ரூ.1,03,51,500 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகையும் இன்றுமுதல் வழங்கப்படவுள்ளது.

இதுவரை மீனவர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.600 செலுத்த வேண்டும். அரசு தனது பங்களிப்பாக ரூ.600 சேர்த்து மொத்தம் ரூ.1200 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. 2009-10-ம் ஆண்டிற்கான இத் திட்டத்தில் அரசு பங்களிப்புத் தொகை ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 1800 நிவாரணத் தொகை வழங்கப்படும்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகுகள் சரிபார்க்கும் பட்டறை, வலை பின்னும் கூடம், மீன் உலர வைக்கும் மையம், ஐஸ் உற்பத்திக் கூடம் அமைத்தல் போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி திரேஸ்புரம் மீன் இறங்குதளத்தை நவீனப்படுத்த தமிழக அரசு ரூ.5 கோடி அனுமதித்துள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்ததும் திட்டப் பணிகள் தொடங்கும் என்றார் அமைச்சர்.

விழாவில் தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், துணை மேயர் தொம்மை ஜேசுவடியான், மீன்வளத் துறை இணை இயக்குநர் எஸ். ஜூடு ஆம்ஸ்ட்ராங், உதவி இயக்குநர் அ. அந்தோனி சேவியர், மாநகராட்சி உறுப்பினர்கள் டெல்வின் பாஸ்வல், ரெக்ஸிலின், அமால்தீன், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராபர்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 30 September 2009 06:14
 

இயற்கை உரத்தில் தரமான விளைபொருட்கள் பெறலாம்

Print PDF

தினமலர் 01.09.2009

 

மதுரை விவசாய கண்காட்சியில் நவீன இயந்திரங்கள்

Print PDF

தினமலர் 20.08.2009

 


Page 6 of 7