Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

பல்லடம் நகராட்சி கட்டிடங்களில் ரூ.22 லட்சத்தில் சூரியமின்சக்தி உற்பத்தி கருவி பொருத்த முடிவு

Print PDF
தினத்தந்தி         27.04.2013

பல்லடம் நகராட்சி கட்டிடங்களில் ரூ.22 லட்சத்தில் சூரியமின்சக்தி உற்பத்தி கருவி பொருத்த முடிவு

பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங் களில் ரூ.22 லட்சத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி கருவி பொருத்த நக ராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
நகராட்சி கூட்டம்

பல்லடம் நகராட்சி கவுன் சிலர்கள் கூட்டம் நகராட்சியில் உள்ள கூட்ட அரங்கில் தலை வர் பி.ஏ.சேகர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் (பொறுப்பு) சாந்தகுமார் மற் றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாக்கடை வசதி, கழிப்பிடம், ரோடு வசதி, தெருவிளக்குகள், நாய்கள் தொந்தரவு, ரோடுகள் அகலப்படுத்த தோண்டப் பட்ட குழிகள் மூடாமல் இருப் பது, பொது குழாய்களுக்கு அருகே துணி துவைப்பது உள்ளிட்ட குறைகள் குறித்து பேசினார்கள்.

சூரிய ஒளி மின்உற்பத்தி கருவி

கூட்டத்தில், நகராட்சி நிர் வாக ஆணையாளர் உத்தரவுப் படி பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் மேற்கூரையில் சூரிய ஒளியில் இருந்து மின்உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான செலவை நகராட்சி யின் பொது நிதியில் இருந்து செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.5 லட்சம் மதிப்பில் பல்லடம் அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங் களிலும், ரூ.17 லட்சம் செலவில் நகராட்சி அலுவலக கட்டிடங் களிலும் சூரிய ஒளி மின்உற் பத்தி செய்யும் கருவிகள் பொருத்த முடிவு செய்யப் பட்டது.

மேலும் கிருமி நாசினிகள் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து களான பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்புத்தூள், பினாயில் வாங்க ஒரு ஆண்டுக்கு ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்வது உள்பட 30 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
 

திருமழிசை பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம்

Print PDF

தமிழ் முரசு                  27.04.2013

திருமழிசை பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி கூட்டம் தலைவர் அமுதா முனுசாமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஜெயக்குமார், துணை தலைவர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருமழிசை பேரூராட்சியில் ரூ.20 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று வருகிறது.

தற்போது திருத்திய மதிப்பீடு தொகை ரூ. 30 கோடியே 60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையான ரூ. 10 கோடியே 19 லட்சம் நிதியை பேரூராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்று மேலாண்மை இயக்குநரின் கடிதம் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணியால் சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை மாற்றவும், அதற்கான தொகையை வழங்கவும், பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பழுது பார்த்து வண்ணம் பூசுவது, மடவிளாகம், பஜனை கோயில் தெருவில் பொதுநிதி மூலம் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள் முனுசாமி, திருநாவுக்கரசு, கருணாநிதி, சந்திரன்,வி. சங்கர், முருகன், பாஸ்கரன், மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 29 April 2013 10:12
 

பெருங்குடியில் விதிமீறல்: கட்டடத்துக்கு சீல்

Print PDF
தினமணி        26.04.2013

பெருங்குடியில் விதிமீறல்: கட்டடத்துக்கு சீல்


பெருங்குடி பகுதியில் விதி மீறிக் கட்டப்பட்டு வந்த கட்டடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருங்குடி தொழிற்பேட்டை, ராஜீவ் காந்தி சாலை, சீவரம் கிராமம் மனை எண் 18-சி என்ற முகவரியில் வாகன நிறுத்தும் தளம் மற்றும் 2 தளங்களைக் கொண்ட ஆட்டோ மொபைல் மின்னணு உதிரிப் பாகங்கள் பராமரிப்பு நிறுவனம் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக 3-வது தளம் வணிகப் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு அதன் உரிமையாளருக்கு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டது.

அறிவிக்கை கிடைத்த பின்னரும் விதிகளின்படி மாற்றி அமைக்கப்படாததால் அந்தக் கட்டடத்தின் 3-வது தளத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
 


Page 17 of 96