Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

மாநகராட்சி 1ம்தேதி முதல் அமல் பிளாஸ்டிக் குப்பை தந்தால் குலுக்கலில் தங்க நாணயம்

Print PDF

தினகரன்            21.08.2013

மாநகராட்சி 1ம்தேதி முதல் அமல் பிளாஸ்டிக் குப்பை தந்தால் குலுக்கலில் தங்க நாணயம்

சென்னை:  மாநக ராட்சியில் பிளாஸ்டிக் குப்பையை வழங்கும் பொது மக்களுக்கு குலுக்கல் அடிப்படையில் தங்க நாணயம் வழங்கும் திட்டம் வரும் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

திடக்கழிவுகளிலிருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை (குப்பையை) பொது மக்கள் பங்களிப்புடன் பிரித்தெடுக்க மாநகராட்சி புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் குப்பையை பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாண யம் பரிசாக வழங்கும் திட்டத்தை மாநகராட்சி சமீபத் தில் அறிவித்தது. இத்திட்டம் வரும் 1ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்தப் படவுள்ளது.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும் வாரத்தில் புதன் மற்றும் சனி கிழமைகளில் காலை 9.00மணி முதல் 5.00மணி வரை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி ஊழியரிடம் வழங்கவேண்டும்.

ஒவ்வொரு கிலோ பிளாஸ்டிக் குப்பையின் கவரில் சம்பந்தப்பட்ட உதவிசெயற்பொறியாளர் கையெழுத்திட்டு,   பொது மக்களுக்கு டோக்கன் வழங்குவார். ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு மாதமும் பிளாஸ்டிக் குப்பையின் மொத்தஅளவு 500 கிலோவிற்கு அதிகமாகும் போது, அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் புதன்கிழமையன்று குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு, அரை கிராம் தங்க நாணயமும், அடுத்து 5 பேருக்கு கைகடிகாரமும் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.

 

இடிபாடு குப்பைகளை கொட்ட அனைத்து மண்டலங்களிலும் தனியிடம்

Print PDF

தினமணி                20.08.2013

இடிபாடு குப்பைகளை கொட்ட அனைத்து மண்டலங்களிலும் தனியிடம்

சென்னையில் சேரும் கட்டுமான இடிபாடு குப்பைகளை கொட்டுவதற்கு என்று தனியாக ஒவ்வொரு மண்டலத்திலும் வளாகம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் சேரும் குப்பைகள் அனைத்தும் பெருங்குடி, பள்ளிக்கரணை, கொடுங்கையூர் உள்ளிட்ட குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளுடன் கட்டட இடிபாடு குப்பைகளும் இந்த வளாகங்களில் கொட்டப்படுகின்றன. மேலும் சென்னையில் உள்ள நீர்வழிப் பாதைகளின் கரைகளிலும் கட்டடக் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், அனைத்து மண்டலங்களிலும் இடிபாடு குப்பைகளைக் கொட்ட தனி வளாகங்கள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் இடிபாடு குப்பைகள் மற்ற குப்பைகளுடன் சேர்த்து குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்படுகின்றன. மேலும் சாலையோரங்களிலும் இடிபாடுகள் கொட்டப்படுகின்றன. இதனைத் தடுக்க மாநகராட்சி முயற்சித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு இடம் தேர்வு செய்து இடிபாடு குப்பைகள் கொட்ட வளாகம் அமைக்கப்படும். இடிபாடு குப்பைகளை இந்த வளாகங்களில் மட்டுமே கொட்டவேண்டும். மேலும் இதற்கு கட்டணம் வசூலிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் கூடிய விரைவில் செயல் வடிவம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தங்கம்: செப்டம்பர் 1 முதல் அமல்

Print PDF

தினமணி                20.08.2013

பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தங்கம்: செப்டம்பர் 1 முதல் அமல்

சென்னையில் பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுத்து கொடுக்கும் பொதுமக்களுக்கு தங்கக் காசு வழங்கும் திட்டம் செப்டம்பர் 1-ஆம் முதல் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மெல்லிய பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்துக் கொடுக்கும் பொதுமக்களுக்கு தங்கக் காசுகள், கைக் கடிகாரங்கள் ஆகியவை வழங்கப்படும் என்று மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்தத் திட்டத்தை சோதனை முயற்சியாக செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி தரப்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: திடக்கழிவுகளில் இருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுத்து கொடுக்க ஆர்வம் காட்டும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் செப். 1-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு சோதனை முயற்சியாக அனைத்து வார்டுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி, ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிளாஸ்டிக் குப்பைகளை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஊழியரிடம் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு கிலோவுக்கும் உதவி செயற்பொறியாளர் கையெழுத்திட்ட எண் இலக்கத்துடன் ஒரு டோக்கன் வழங்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் மாதந்தோறும் 500 கிலோவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் வழங்கப்பட்டால் மட்டுமே அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் புதன்கிழமை முந்தைய மாதத்தில் வழங்கப்பட்ட டோக்கன்களின் குலுக்கல் நடத்தப்படும். குலுக்கலில் முதல் பரிசு பெறுபவருக்கு அரை கிராம் தங்க நாணயமும், அடுத்த 5 பேருக்கு கைக் கடிகாரமும் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 18 of 66