Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

வழக்கமாக 450விழா நாட்களில் 900 டன் குப்பை

Print PDF

தினமலர்          15.10.2013

வழக்கமாக 450விழா நாட்களில் 900 டன் குப்பை

மதுரை : மதுரை மாநகராட்சியில் விரிவாக்கத்திற்கு பின்பு, ஒரு நாளில் தேங்கும் குப்பை அளவு, 450 டன். இதில் மக்காத குப்பை 150 டன். குப்பையை தேக்குவதிலும், சேகரிப்பதிலும், வெளியேற்றுவதிலும் தொய்வு நிலவுகிறது.

மாநகராட்சியை குறைசொல்லும் அதேநேரத்தில், இந்தளவு குப்பை குவிய, மக்களும் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது. மாநகராட்சியில் பல கால்வாய்களை, குப்பையால் மூடிய "பெருமை' மதுரை மக்களை சேரும். இன்றும், பல இடங்களில் குப்பைத் தொட்டியை விட, அதைச் சுற்றி சிதறியுள்ள குப்பை டன் கணக்கில் இருக்கும்.தீபாவளிக்கு அடுத்து, ஆயுத பூஜையின் போது, மதுரையில் அதிக குப்பை தேங்குகிறது. வழக்கத்தை விட, இரு மடங்கு அதிகரிக்கும் குப்பையை அகற்ற, குறைந்தது ஒரு வாரம் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கூடுதல் பணியாளர்களை அமர்த்தினாலும், பணியை இரட்டிப்பாக்கினாலும், இருக்கும் வாகனங்களை வைத்து பார்க்கும் போது, விழாக்கால குப்பையை அகற்றுவது, சாதாரண விஷயம் அல்ல. நேற்று முன்தினம் மதுரையில் தேங்கிய குப்பை அளவு, 900 டன். நேற்று 550 டன். அவற்றை அகற்றும் பணிகள், முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், பணிகள் எப்போது முழுமை பெறும் என்பது, கேள்விக்குறியே. நகரின் சூழலை புரிந்து, நம் பயன்பாட்டை குறைப்பதுடன், வீண் கழிவுகள் கொட்டுவதை தவிர்த்தால், வழக்கமான குப்பை சேகரிக்கும் பணியில், தொய்வு இருக்காது. டன் கணக்கில் குப்பை சேர்ந்து கொண்டிருந்தால், மில்லியன் கணக்கில் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகிவிடும் என்பதை, அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.

 

குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை

Print PDF

மாலை மலர்               09.10.2013

குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை
 
குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கைநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் பல்வேறு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுகளை அந்த துறையின் செயலாளர் கே.பணீந்தர ரெட்டி துரிதமாக செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.
 

பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் செட்டிபாளையம் பொதுமக்கள்

Print PDF

தினமலர்             03.10.2013

பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் செட்டிபாளையம் பொதுமக்கள்

திருப்பூர் :திருப்பூரில், பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் பொதுமக்கள் நேற்று களமிறங்கினர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், 100 கிலோ பிளாஸ்டிக் சேகரித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 550 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 300 டன் வரை பிளாஸ்டிக் கழிவாக இருக்கிறது. குப்பை கிடங்கு மட்டுமன்றி, ரோடு, சாக்கடை கால்வாய், விவசாய நிலங்கள் என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவு பரவியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியிலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்தும் வகையில், பசுமை நண்பர்கள் அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணி நேற்று துவங்கியது. இதற்கான துவக்க விழா, கே.செட்டிபாளையம் பள்ளியில் நடந்தது. பசுமை நண்பர்கள் அமைப்பு தலைவர் பாபு தலைமை வகித்தார். 36வது வார்டு கவுன்சிலர் பேபி தேசியக்கொடி ஏற்றினார். காந்தி படத்துக்கு, தர்மலிங்கம், மணி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, அனைவரும் ஆர்வமாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர். கே.செட்டிபாளையம் முதல், விவேகானந்தா பள்ளி வரை, ஒரு கிலோ மீட்டர் தூரம், ரோட்டின் இருபுறமும் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கி எடுத்தனர்.

ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 50 மூட்டைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், 100 கிலோ இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரதான ரோட்டிலேயே இவ்வளவு பிளாஸ்டிக் கழிவு இருந்தால், குடியிருப்பு பகுதிகள், குப்பை தேங்கும் இடங்களில் இன்னும் அதிகளவு இருக்க வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக, கே.செட்டிபாளையத்தில் இப்பணி துவங்கியுள்ளது. இதேபோல், மாதத்துக்கு ஒரு முறை, ஏதாவது ஒரு பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணி நடத்தப்படும் என பசுமை நண்பர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.

 


Page 14 of 66