Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

3 நாட்களில் 2,025 டன் குப்பைகள் சேகரிப்பு மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி            05.11.2013

3 நாட்களில் 2,025 டன் குப்பைகள் சேகரிப்பு மாநகராட்சி நடவடிக்கை

மதுரை மாநகரில் 3 நாட்களில் மொத்தம் 2,025 டன் குப்பைகளை மாநகராட்சி சேகரித்து உள்ளது.

வெள்ளக்கல் கிடங்கு

மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் தினமும் 400 முதல் 500 டன் வரை குப்பைகள் தினமும் சேகரிக்கபடுகிறது. பல்வேறு வாகனங்கள் சேகரிக்கப்படும் இந்த குப்பைகள் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு இந்த குப்பைகள் தரம் பிரித்து உரமாக தயாரிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 25 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

178 வாகனங்கள்

மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மதுரை மாநகராட்சி நான்கு மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 90 டம்பர் பிளெசர்கள் 11 டிப்பர் லாரிகள் 5 காம்பெக்டர்கள், 37 டிராக்டர்கள் மற்றும் 37 ஆட்டோக்கள் என மொத்தம் 178 வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளைக்கல்லில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் உரம் தயாரிக்க கொட்டப்பட்டு வருகிறது.

2025 டன் குப்பைகள்

தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 2–ந் தேதியன்று 482 டன் குப்பைகளும், 3ந் தேதியன்று 537 டன் குப்பைகளும் நேற்று (4–ந் தேதியன்று) 1,006 டன் குப்பைகளும் என மூன்று நாட்களில் மட்டும் 2,025 டன் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

திடகழிவுகளை முறையாக செயல்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் மு.கருணாகரன் பேச்சு

Print PDF

தினத்தந்தி            04.11.2013

திடகழிவுகளை முறையாக செயல்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் மு.கருணாகரன் பேச்சு

திட மற்றும் திரவ கழிவுகளை முறையாக செயல்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. என்று கலெக்டர் மு.கருணாகரன் கூறினார்.

கண்காணிப்புக்குழுக் கூட்டம்

நெல்லை மாவட்ட அளவிலான திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் மு.கருணாகரன் தலைமை பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களை தூய்மையான கிராமமாக மாற்றிடும் வகையில் திட மற்றும் திரவ கழிவுகளை முறையாக செயல்படுத்தும் பணிகளுக்காக தமிழக முதல்–அமைச்சர் 2013–2014ம் நிதி ஆண்டிற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மாவட்ட அளவில் கலெக்டரை தலைவராக கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செயல்படுவார்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாநகராட்சி ஆணையாளர், கோட்ட வன அலுவலர், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர், மகளிர் திட்ட அலுவலர், வேளாண்மைத் துறை இணைஇயக்குநர், புதுவாழ்வுத்திட்ட மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொழில் மைய பொது மைய மேலாளர், கிராம பஞ்சாயத்து உதவி இயக்குநர், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர், நகரபஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர், உள்பட அலுவலர்கள், சங்கரன்கோவில், செங்கோட்டை நகரசபை ஆணையாளர்கள் ஊக்கிரன்கோட்டை, சிவந்திபுரம், ஆனைகுளம், கீழவெள்ளக்கால், சவுந்திரபாண்டியாபுரம் ஆகிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள், முன்னீர்பள்ளம், மணப்படைவீடு ஆகிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஊக்குனர்கள், ஏ.ஐ.ஆர்.டி. தொண்டு நிறுவனம், ஸ்கார்ட் நிறுவன நிர்வாக அறங்காவலர் ஆகிய 28 பேர் அடங்கிய உறுப்பினர்களை கொண்டு செயல்படுகிறது.

மீத்தேன் வாயு தயாரித்தல்

நமது மாவட்டத்தில் முதற்கட்டமாக நல்லூர் மற்றும் சிவந்திபுரம் கிராம பஞ்சாயத்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அனைத்துக் கிராமங்களும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், நிலையான நீடித்த திடக்கழிவு மேலாண்மை அமைப்பினை கிராமங்களில் உருவாக்கிடவும், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து குப்பைகள் அற்ற கிராமங்களாக உருவாக்கிடவும், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை சேரமால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி கிராமங்கள் தோறும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகும். குப்பைகளை கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது போன்ற நடவடிக்கைகளால் கிராமங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளை கொண்டு அடுப்பு எரிக்க எரிவாயு உருவாக்குதல், பாதுகாப்பாக மீத்தேன் வாயு தயாரித்தல், போன்ற நடவடிக்கை மூலமாகவும் சுகாதாரத்தை மேம்படுத்தலாம். இதன்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடலாம்.

இந்த திட்டங்களை செயல்படுத்துவது திட்டமிடுவது பஞ்சாயத்து நிர்வாகத்தின் பொறுப்பாகும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்திட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தனிநபர் கழிப்பறை அமைத்திட வேண்டும்.

தனிநபர் கழிப்பறை

தனிநபர் கழிப்பறை அமைக்க பயனாளிகள் ரூ.900 மட்டும் செலுத்தினால், மத்திய, மாநில நிதி உதவியுடன் மான்யத்தில் ரூ.11 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிப்பிட வசதி ஏற்படுத்திட அரசு வழிவகை செய்துள்ளது. இதனை முழுமையாக கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிராம மக்களிடையே சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராமமக்களை சுத்தமாக பராமரிக்க செய்தல் வேண்டும் திரவ மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணித்து திட்டத்தினை வெற்றிபெற செய்வது உள்ளாட்சி அமைப்புகளின் கடமையாகும்.

இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.விஜயகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பா.நாராயணபெருமாள், மாநகராட்சி ஆணையாளர் த.மோகன், கோட்ட வன அலுவலர் பேரின்ப ஜெபகுமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அசன் இப்ராகீம், மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் க.சவுந்திரராஜன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மாரியம்மாள், முன்னோடி வங்கி அலுவலர் அழகர்சாமி, கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

வெளிநாடுகளில் இருப்பது போல பூமிக்கடியில் குப்பை தொட்டி

Print PDF

தினகரன்         02.11.2013

வெளிநாடுகளில் இருப்பது போல பூமிக்கடியில் குப்பை தொட்டி

சென்னை, : சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சியின் 2 ஆண்டு பணிகள் குறித்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:

வெளிநாடுகளில் பூமிக்கடியில் குப்பை தொட்டி அமைத்து குப்பை அகற்றும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதை போல சென்னை மாநகரிலும் சாலைகளில் குப்பை தொட்டிகள் வைப்பதை தவிர்த்து பூமிக்கடியில் குப்பை தொட்டி அமைத்தால் நல்ல தோற்றம் உருவாகும். இந்த புதிய முறையை செயல்படுத்த தேவையான விவரம் பரிசீலிக்கப்பட்டு உரிய ஒப்புதலுக்கு பின் செயலாக்கப்படும். பத்திரிகைகளில் நோய் தாக்கம் அதிகம் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நோயின் தாக்கம் குறைந்துள்ளது என்றார்.

தினகரன் செய்திகளுக்கு நடவடிக்கை

மாநகராட்சி சேவை குறைபாடுகள் குறித்து 2012ல் பத்திரிகைகளில் 2261 செய்திகள் வந்துள்ளன. இதில், 2174 செய்திகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 87 செய்திகள் நடவடிக்கை நிலுவையில் உள்ளது. தினகரன் பத்திரிகையில் 640 செய்திகள் வந்துள்ளன. இதில், 620 செய்திகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

 


Page 13 of 66