Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ. 41 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு

Print PDF

தினமணி      11.02.2016

ரூ. 41 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு

பூந்தமல்லி நகராட்சி 7-ஆவது வார்டில் ரூ.41 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர்கள் பி.வி.ரமணா, எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பூந்தமல்லி நகராட்சி 7-ஆவது வார்டுக்கு உள்பட்ட எம்.எஸ்.வி.நகர், சின்னப்பா நகர் பகுதியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும நிதியில் இருந்து ரூ.41 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நகர்மன்ற உறுப்பினர் தனலட்சுமி கோபிநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு பூங்காவைத் திறந்து வைத்தனர்.

குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நம்ம டாய்லட், மேல்மா நகர் பகுதியில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

இவ்விழாக்களில் பூந்தமல்லி எம்எல்ஏ மணிமாறன், ஒன்றியக் குழுத் தலைவர் திருநாவுக்கரசு, கூட்டுறவு சங்கத் தலைவர் கே.எஸ். ரவிச்சந்திரன், நிலவள வங்கித் தலைவர் ஜாவித் அகமது, நகரச் செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ. 7 கோடியில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம்

Print PDF
தினமணி        10.11.2014

ரூ. 7 கோடியில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம்


சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் அண்மையில் தொடங்கியது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி: திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகில் தண்டையார்பேட்டை மண்டலத்துக்குப் புதிய கட்டடம் கட்டும் பணியை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். ரூ. 7.19 கோடியில் 3 தளங்களுடன் இந்தக் கட்டடம் கட்டப்படவுள்ளது. மூன்று தளங்களிலும் அதிகாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்படும். தரைத்தளம் 872 சதுர மீட்டர் பரப்பிலும், முதல் தளம் 930 சதுர மீட்டர் பரப்பிலும் கட்டப்படும்.

இரண்டாம், மூன்றங்கள் தளங்கள் தலா 978 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும். இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் வடசென்னை தொகுதி மக்களை உறுப்பினர் டி.ஜி. வெங்கடேஷ் பாபு, துணை மேயர் பா. பென்ஜமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல புதிய அலுவலகம் திறப்பு

Print PDF

தினமணி       24.09.2014

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல புதிய அலுவலகம் திறப்பு

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல புதிய அலுவலகத்தை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

 மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் ரூ.1.75 கோடி மதிப்பில் புதிய மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து  தமிழக முதல்வர் ஜெயலலிதா, காணொலிக் காட்சியில் திறந்து வைத்தார். மேலும், பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்களின்கீழ் 81 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக தலா ரூ.25 ஆயிரம், ஏழை இளைஞர்கள் 4,500 பேருக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக ரூ.3.21 கோடி வழங்கப்பட்டது.

 இதையொட்டி புதிய மண்டல அலுவலக கட்டடத்தை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா பார்வையிட்டு பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ், துணை மேயர் கு.திரவியம், துணை ஆணையர் மீனாட்சி, மண்டலத் தலைவர்கள் ஜெயவேல், சாலைமுத்து மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

 


Page 2 of 238