Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுவதற்கு சர்வே

Print PDF

தினமலர்                30.01.2014

புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுவதற்கு சர்வே

பெரியகுளம்: பெரியகுளத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுவதற்கு சர்வே செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, கவுன்சில் கூட்டத்தில் தலைவர் அறிவித்தார்.

பெரியகுளம் நகராட்சி கூட்டம், தலைவர் ஓ.ராஜா தலைமையில் நடந்தது. கமிஷனர் மகேஸ்வரி, துணைத்தலைவர் முகுந்தன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நடந்த விவாதம்.

சம்சுதீன்: நகராட்சி இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. தலைவர்: அழகர்சாமிபுரம் பகுதியில், ஆக்கிரமிப்பு செய்து, கடைகள் கட்டப்பட்டுள்ளன. மின்துறை நிர்வாகம் அதற்கு எப்படி இணைப்பு வழங்கியது, என தெரியவில்லை. உடனடியாக ஆக்கிரமிப்பு இடத்தை கையகப்படுத்த வேண்டும். மேலும் நகராட்சிக்கு இடங்கள் எங்கெங்கு உள்ளது, என்ற விபரத்தை சர்வேயர் உதவியுடன் கமிஷனர் தெரிவிக்க வேண்டும்.

கமிஷனர்: விரைவில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும்.தலைவர்: பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனை எதிர்புறம், சுகாதார பணியாளர்கள் குடியிருப்பு காலனி பகுதியில் 6 ஏக்கர் இடம் உள்ளது. அப்பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு, புதிதாக பஸ்ஸ்டாண்ட் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய பஸ்ஸ்டாண்ட்டில் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்படும்.

சக்திவேல்: 29 வது வார்டில் போதுமான தெருக்குழாய் வசதி இல்லை.தலைவர்: அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சந்திரன்: 28 வது வார்டில் துப்புரவு பணி மந்த நிலையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

 

சுகாதாரப் பணிக்கு 2 புதிய சுமை ஆட்டோக்கள்

Print PDF

தினமணி             31.01.2014

சுகாதாரப் பணிக்கு 2 புதிய சுமை ஆட்டோக்கள்

திருச்செந்தூர் பேரூராட்சி சுகாதாரப்பணிக்கு ரூ. 10 லட்சத்தில் 2 புதிய சுமை ஏற்றும் ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளன.

பேரூராட்சிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி 2013-2014-ன் கீழ் வாங்கப்பட்டுள்ள, இப்புதிய வாகனங்களை  பேரூராட்சித்தலைவர் மு.சுரேஷ்பாபு, செயல் அலுவலர் கொ.ராஜையாவிடம் வழங்கினார்.

அப்போது சுகாதார ஆய்வாளர் கு.பூவையா, எழுத்தர் மாணிக்கம், ஓட்டுநர்கள் லட்சுமணன், செல்லப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 03 February 2014 07:18
 

அவல்பூந்துறை பேரூராட்சியில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

Print PDF

தினமணி             31.01.2014

அவல்பூந்துறை பேரூராட்சியில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

அவல்பூந்துறை பேரூராட்சியில் புதன்கிழமை குடிநீர்த் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.

அவல்பூந்துறை பேரூராட்சி 6-ஆவது வார்டு, பொங்காளிவலசில் சாக்கடை கட்டும் பணிக்காக பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 1.65 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணியை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் மணி (எ) சிவசுப்பிரமணியம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல, சென்னிமலைப்பாளையத்தில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 4.5 லட்சம் செலவில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இதிலிருந்து குடிநீர் விநியோத்தை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமி துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் கே.சி.ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் தினகரன், சண்முகம், அட்டவணை அனுமன்பள்ளி முன்னாள் துணைத் தலைவர் கோவிந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் பொன்னுசாமி, அவல்பூந்துறை டெக்ஸ் தலைவர் பூவைதமிழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 8 of 238