Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மதுரை மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற திரையரங்குகள், மருத்துவமனைகளுக்கு அபராதம்

Print PDF

 தினமலர்                14.01.2015

மதுரை மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற திரையரங்குகள், மருத்துவமனைகளுக்கு அபராதம்

மதுரை மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த மருத்துவமனைகள், திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கொசு உற்பத்தியாகும் வகையில் இருக்கும்

கட்டடங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை ஆணையாளர் சி.கதிரவன் உத்தரவின் பேரில், 4 மண்டலத்துக்கும் உள்பட்ட பகுதிகளில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், திருமண மண்டபங்கள்,

திரையரங்குகள், மருத்துவமனைகள், பள்ளிகள், தனியார் வணிக வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 12 தனியார் மருத்துவமனைகள், 8 திரையரங்குகள், 5 திருமண மண்டபங்கள், 3 தனியார்

பள்ளிகள், 2 தனியார் வணிக வளாக கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வகையில், மண்டலம் 1-ல் உதவி ஆணையாளர் ஆர். குணாளன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ரூ.30 ஆயிரமும், மண்டலம் 2-ல் உதவி ஆணையாளர்

பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ரூ.10,000-ம், மண்டலம் எண் 3-ல் உதவி ஆணையாளர் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ரூ.5,000-ம்,

மண்டலம் எண் 4-ல் ரூ.5,000-ம் ஆக மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள மாநகராட்சி மூலம் கட்டட உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வின் போது

சுகாதாரக்கேடு தெரியவந்தால், அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆய்வின் போது, சுகாதார ஆய்வாளர்கள் வீரன், கோபால், ராஜ்கண்ணன் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி: நகர்மன்ற தலைவி தொடங்கி வைத்தார்

Print PDF
தினமலர்            14.01.2015  

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி: நகர்மன்ற தலைவி தொடங்கி வைத்தார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி தொடங்கி வைத்தார். நகர்மன்ற திரு.வி.க. தொடக்கப் பள்ளியில் இந்த சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்து நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி பேசுகையில் கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள், ஆதரவற்றோர் விடுதிகள், மாணவ மாணவியர் விடுதிகளில் இந்த நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் பேருந்து நிலையம், முக்கியமான சந்திப்புகளில் இதற்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலவேம்பு குடிநீரை தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் குடித்து வந்தால், டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக நில வேம்பு பொடியை பொதுமக்கள் பெற்று, வீட்டிலேயே நீரை கொதிக்கவைத்து அதில் பொடியைப் போட்டு அருந்தலாம் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜாகுணசீலன், நகராட்சி ஆணையாளர் பழனிவேல், துணைத் தலைவர் சரோஜா நடராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நகரில் டெங்கு பாதிப்பைக் குறைக்க 15 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள்

Print PDF

தினமணி        04.12.2014

நகரில் டெங்கு பாதிப்பைக் குறைக்க 15 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள்

மதுரை நகரில் டெங்கு பாதிப்பில் பள்ளி மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து ஊரகப் பகுதியிலிருந்து 15 சுகாதார ஆய்வாளர்கள் மாற்றுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் செல்லூர், விஸ்வநாதபுரம், கீழச்சந்தைப்பேட்டை, தத்தனேரி உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு பாதித்தோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதில், கீழச்சந்தைப் பேட்டையைச் சேர்ந்த பெனாசிர் எனும் மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்தை மேம்படுத்திட மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் அவசரக் கூட்டத்தை புதன்கிழமை கூட்டினார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ரோகிணிராம்தாஸ், மாநகராட்சி ஆணையர் கதிரவன், ஊரக சுகாதார துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து மாநகராட்சியில் சுகாதாரத்தை மேம்படுத்த ஊரகப்பகுதியிலிருந்து 15 சுகாதார ஆய்வாளர்கள் மாற்றுப்பணியாக மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை 26 குழந்தைகளும், 178 பேரும் தீவிர காய்ச்சலுக்காக சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் யாருக்கும் டெங்கு பாதிப்பில்லை என மருத்துவர்கள் கூறினர்.

 


Page 3 of 519