Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நம்ம டாய்லெட் திட்டம்: குஜராத் அதிகாரிகள் பாராட்டு

Print PDF

தினமணி              07.01.2014

நம்ம டாய்லெட் திட்டம்: குஜராத் அதிகாரிகள் பாராட்டு

தமிழக நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே வழிகாட்டுதலின் பேரில் வடிவமைக்கப்பட்டு, தாம்பரத்தில் அனைவரது ஏகோபித்த பாராட்டை பெற்று செயல்பட்டு வரும் "நம்ம டாய்லெட்' கழிப்பிட திட்டத்துக்கு குஜராத் மாநில அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி, முடிச்சூர் பேரூராட்சியில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுசுகாதாரத் திட்டங்களை குஜராத் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர் வி.திருப்புகழ், நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் மோனா காந்தார், ஆமதாபாத் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை இயக்குனர் நரேஷ் ஆர்.ராஜ்புத் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

தாம்பரம் பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள நம்ம டாய்லெட் கழிப்பறையின் வடிவமைப்பு, சுகாதாரத்துடன் பராமரிக்கும் முறை, வெளி மாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டினரின் பாராட்டுக் குறிப்பு உள்ளிட்டவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் சேலையூர் பாரத் நகரில் 135 குடும்பத்தினர் பயன்படுத்தி வரும் சமுதாய கழிப்பறைகளை அவர்கள் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் முடிச்சூர் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் சமுதாய கழிப்பறைகளையும் பார்வையிட்டனர். பின்னர் குஜராத் ஊரக வளர்ச்சித்துறை செயலர் வி.திருப்புகழ் தினமணி செய்தியாளரிடம் பேசும்போது, நகர்ப்புறப் பகுதிகளில் மனித கழிவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பொதுசுகாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து செயல்படுத்தி வரும் திட்டங்களான நம்ம டாய்லெட், நம்ம சமுதாய சமையல்கூடம் ஆகியவை இங்கு பாராட்டத்தக்க வகையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். இந்த திட்டங்களை குஜராத்தில் செயல்படுத்துவது குறித்து முதல்வருடன் கலந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என்றார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாடு திட்ட மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், கூடுதல் இயக்குனர் லட்சுமிபதி, நகராட்சிகள் நிர்வாக உதவி பொறியாளர் வி.முருகேசன், தாம்பரம் நகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்ரமணியன், தாமஸ்மலை வட்டார வளர்ச்சி அதிகாரி மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

மாநகராட்சி துவக்கப்பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்

Print PDF

தினமலர்               06.01.2014

மாநகராட்சி துவக்கப்பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்

கோவை :மாநகராட்சிக்கு உட்பட்ட துவக்கப்பள்ளிகளில், விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு உபகரணங்கள் வாங்க, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், 16 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர் நிலைப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 41 துவக்கப்பள்ளிகள், சிறப்பு மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி தலா ஒன்று என, 83 பள்ளிகள் உள்ளன.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு கல்வியுடன், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், மாநகராட்சி வசமுள்ள துவக்கப்பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 55 உள்ளன. இதில், பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில், விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. 20 பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் நிறுவ வேண்டியுள்ளது. அந்த பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து, விளையாட்டு உபகரணங்கள் நிறுவ 60 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டதும், துவக்கப்பள்ளிகளில் சீசா, சறுக்கு, ஊஞ்சல், படிக்கட்டு விளையாட்டு உள்ளிட்ட உபகரணங்கள் நிறுவப்படவுள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் முறை புகுத்தப்பட்டுள்ளதால், கல்வித்திறனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கவும், விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும், சக மாணவர்களுடன் குழுவாக விளையாட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி கல்வி நிதியில், விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தி, விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்படுகிறது' என்றார்.

மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் முறை புகுத்தப்பட்டுள்ளதால், கல்வித்திறனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கவும், விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும், சக மாணவர்களுடன் குழுவாக விளையாட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

 

போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க வேண்டும்

Print PDF

தினமணி               06.01.2014

போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க வேண்டும்

கோவை மாநகராட்சி பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

கோவை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் என்.கே.ராமகிருஷ்ணன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாநகரில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

கோவை மாநகராட்சி கழிவுகள் சரியாக அகற்றப்படாத காரணத்தாலும், சாக்கடைகளை தூர்வாராத காரணத்தாலும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, சிக்கன்குன்யா போன்ற விஷக் காய்ச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வீரியம் மிக்க கொசு மருந்துகளை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் கொசுகளை ஒழிக்க நடவடிக்கை மாநகராட்சி எடுக்க வேண்டும்.

கோவை மாநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம், மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 15 of 519