Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மழைக்காலம்: திருமணிமுத்தாறில் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

Print PDF

தினமணி 18.07.2009

மழைக்காலம்: திருமணிமுத்தாறில் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

சேலம், ஜூலை 17: சேலத்தில் மழைக் காலம் தொடங்குவதை அடுத்து திருமணிமுத்தாறில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

சேலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நகரின் முக்கிய வடிகால்களில் மழை நீர், கழிவு நீருடன் கலந்து ஓடுகிறது.

நகரின் பிரதான கழிவு நீர் கால்வாயாக மாறிவிட்ட திருமணி முத்தாறை அழகுபடுத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மழைக் காலம் தொடங்கியுள்ளதால் திருமணி முத்தாறில் நீரோட்டத்தைத் தடுக்கும் விதத்தில் உள்ள கழிவுகளை அகற்றி மழை நீர் எளிதில் செல்ல வழி ஏற்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் கே.எஸ். பழனிச்சாமி உத்தரவிட்டார். இதையடுத்து திருமணிமுத்தாற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அணைமேடு பகுதியில் இருந்து தொடங்கிய பணியில் 150-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், 2 மினி பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இது குறித்து ஆணையர் பழனிச்சாமி கூறியது: மழைக் காலத்தையொட்டி திருமணிமுத்தாறில் உள்ள குப்பைகள், அடைபட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. திருமணிமுத்தாறு அழகுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் வரை இப்பணி நடைபெறும்.

இதில் சம்பந்தப்பட்ட வார்டுகளைச் சேர்ந்த துப்புரவு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் 3 நாள்கள் இப்பணி நடைபெறும். இதேபோல் நகரின் முக்கிய கழிவு நீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டு சீர் செய்யப்படும்.

பள்ளிகளுக்கு வசதிகள்

மாநகராட்சியில் போதிய அளவு கல்வி நிதி உள்ளது. இதனைக் கொண்டு மாநகராட்சிக்குள் உள்ள 10 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 87 பள்ளிகளுக்கும் கட்டடம், கழிப்பிடம், இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அடிப்படை வசதிகள் தேவைப்படும் பள்ளிகளை மாநகராட்சிப் பொறியாளர்கள் நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு தயாரிப்பார்கள்.

முதல் கட்டமாக அம்மாப்பேட்டை அரசுப் பள்ளியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அடுத்த 4 மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.

 

அபாய சின்னம் இல்லாத சிகரெட்டைவிற்க கூடாது: மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை

Print PDF

மாலை மலர் 16.07.2009

அபாய சின்னம் இல்லாத சிகரெட்டைவிற்க கூடாது: மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை

ரோடு, ஜூலை. 15-

சிகரெட், புகையிலை பயன்படுத்துவோரை புற்று நோய் தாக்குகிறது. இந்தியாவில் ஏராளமா னோர் புற்று நோயால் உயிரிழக்கிறார்கள். ஆகவே மத்தியஅரசு நோயை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக சிகரெட் மற்றும் பான்பராக் போன்ற புகையிலை பொருட்களின் பாக் கெட்டுகளில் கட்டாயம் அபாய எச்சரிக்கை சின்னம் இடம் பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த சின்னம் இடம் பெறாத பொருட்களை விற்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஈரோடு மாநக ராட்சி சுகாதார நல அலு வலர் சோமசுந்தரம் கூறிய தாவது:-

மத்திய அரசு உத்தரவுப்படி சிகரெட், புகையிலை பொருட்களில் கண்டிப்பாக அபாய எச்சரிக்கை சின்னம் இருக்க வேண்டும். சின்னம் இல்லாத பொருட்கள் விற்பது கண்டுபிடிக்க பட்டால் சம்பந்தப்பட்ட கடைகாரர்களுக்கு அப ராதம் விதிக்கப்படும்.

மேலும் பள்ளி கல்லூரி கள் அமைந்திருக்கும்இடத்தில் சிகரெட் விற்கக்கூடாது. 300 அடி தள்ளி தான் கடை இருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் விற்பதும் தண்டனைக் குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Friday, 17 July 2009 05:54
 

ரூ.13.53 கோடி செலவில் தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம்; நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது

Print PDF

மாலை மலர் 15.07.2009

ரூ.13.53 கோடி செலவில் தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம்; நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது

சென்னை, ஜூலை. 15-

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில், காலரா போன்ற தொற்று நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பன்றி காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களுக்கு இங்கு தான் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

தண்டையார்பேட்டையில் உள்ள இந்த தொற்று நோய் ஆஸ்பத்திரியை சீரமைத்து நவீன மயமாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் உருவாகும் தண்டையார் பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரிக்கு ரூ.13.53 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இது 221 படுக்கை வசதிக கொண்டதாக இருக்கும் நவீன கருவிகள் மற்றும் ஆம்புலன்சு வண்டிகள் ரூ.1.25 கோடி செலவில் வாங்கப்படுகிறது.

முதல் கட்டமாக 2 பழைய கட்டிடங்கள் இடித்து கட்டப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்குகிறது. மொத்தம் 8.2 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆஸ்பத்திரி அமையும். இதில் நவீன ஆய்வு கூடம், பிரமாண்டமான ஆவண அறை, காட்சி கூடம், கூட்ட அரங்கு, சிறிய ஆலோசனை கூடம், நர்ஸ் பயிற்சி பெறு பவர்களுக்கான வகுப்பறை, சிறப்பு வார்டு ஆகியவை அமைந்திருக்கும்.

நிர்வாக கட்டிடத்தின் பரப்பளவு 5,896 சதுர மீட் டர். நோயாளிகள் சிகிச்சை பெறும் மற்ற இரண்டு கட்டிடங்கள் ஒவ்வொன்றும் 1252.53 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும்.

இதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கி உள்ளது. முதற்கட்ட பணிகளுக்காக சென்னை மாநகராட்சி ரூ.8 கோடி அனுமதித்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படுகிறது.

Last Updated on Wednesday, 15 July 2009 11:48
 


Page 515 of 519