Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருத்தணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு

Print PDF

தினமணி 10.08.2009

திருத்தணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு

திருத்தணி, ஆக. 8: திருத்தணியில் பல இடங்களில் டீக் கடைகள், குளிர்பானக் கடைகள் ஆகியவற்றில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

திருத்தணியில் உள்ள பஸ் நிலையம், அரக்கோணம் சாலை, .பொ.சி. சாலை, திருக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகள், குளிர்பானக் கடைகள், மளிகைக் கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது, திருக்குளம் பகுதியில் உள்ள கடைகளில் பாதுகாப்பு இல்லாமல் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், தரமற்ற குடிநீர்பாக்கெட்டுகள், டீக்கடைகளில் தரமற்ற டீத்தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில் திருத்தணி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கருப்பையா, வாசு, தேவராஜ், வெங்கடேசன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

 

பாதாள சாக்கடைத் திட்டம்: கழிவு நீர் கால்வாய்க்கு 5-வது முறையாக டெண்டர்

Print PDF

தினமணி 31.07.2009

பாதாள சாக்கடைத் திட்டம்: கழிவு நீர் கால்வாய்க்கு 5-வது முறையாக டெண்டர்

சேலம், ஜூலை 30: சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.71.17 கோடியில் கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்படுகின்றன.

இதற்கு ஏற்கெனவே 4 முறை டெண்டர் விடப்பட்டது. இருப்பினும் விலை அதிகமாக உள்ளதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் அவற்றை நிராகரித்துவிட்டது.

இதையடுத்து 5-வது முறையாக டெண்டர் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை தாங்கி ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி பேசியது:

சேலம் மாநகராட்சியில் ரூ.149.39 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக கழிவு நீர் கொண்டுச் செல்லும் குழாய்கள் ரூ.71.17 கோடியில் அமைக்கும் பணி 3 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை பெறப்பட்டு திறக்கப்பட உள்ளன. இந்த டெண்டரில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு தொழில்நுட்பத் தகுதிகள், ஒப்பந்தப்புள்ளி நமூனா விவரங்கள் இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் ஒப்பந்ததாரர்களின் சந்தேகங்களுக்கு கண்காணிப்புப் பொறியாளர் ஞானமணி, உலக வங்கியின் தமிழ்நாடு துணைத் தலைவர் ராஜேந்திரன், செயற்பொறியாளர் காமராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இதில் சுமார் 10 ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

ஊட்டி காந்தல் கால்வாய் தூர்வாரும் பணி

Print PDF

தினமலர் 28.09.2009

 

 


Page 509 of 519