Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பூங்காவைச் சுத்தப்படுத்திய காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள்

Print PDF
தினமணி 11.08.2009
பூங்காவைச் சுத்தப்படுத்திய காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள்

நாகர்கோவில், ஆக. 10: நாகர்கோவில் நகராட்சி சி.பி.ஆர். பூங்காவை காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் சுத்தப்படுத்தினர்.

இப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களிடையே சமூக தொண்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப் பள்ளியின் 40 மாணவர்கள் நகராட்சிப் பூங்காவைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இம் முயற்சி நாகர்கோவிலில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பூங்காக்களை நல்ல முறையில் பராமரிக்கவும், பொது இடங்களை பொதுமக்கள் தாங்களே முன்வந்து சீரமைக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துவதாக பள்ளி இயக்குநர் டாக்டர் பி.ஜே. கிறிஸ்டோபர், இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். லால்மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.

பள்ளி ஆசிரியைகள் எஸ். லதிகா, ஆர். சீதாமணி, சாந்தினி, மனோஜ் ஆகியோர் சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

Last Updated on Tuesday, 11 August 2009 07:08
 

உடுமலை நகராட்சி ச ந்தை வளாகத்தில் இறைச்சி வணிக வளாகம்

Print PDF

தினமலர் 10.08.2009

 

பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது: மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி 10.08.2009

பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது: மாநகராட்சி ஆணையர்

திருச்சி, ஆக. 8: பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடுக்கும் பணியைத் தீவிரப்படுத்துங்கள் என்று மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவுறுத்தினார்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, "சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் இச்செயலைக் கட்டுப்படுத்த அனைத்துக் கோட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கூட்டத்துக்கு மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் முன்னிலை வகித்தார். நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன் மற்றும் உதவி ஆணையர்கள், உதவிச் செயற்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 508 of 519