Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

கோவை மாநகராட்சி சார்பில் குடிசை பகுதி மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கான முகாம் 15–ந்தேதி தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி            11.07.2013

கோவை மாநகராட்சி சார்பில் குடிசை பகுதி மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கான முகாம் 15–ந்தேதி தொடங்குகிறது

குடிசை பகுதி மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுப்பதற்கான விண்ணப்பம் பெறும் முகாம், மண்டல அலுவலகங்களில் 15–ந்தேதி தொடங்குகிறது.

கோவை மாநகராட்சி கமிஷனர் லதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வீடு கட்டும் திட்ட முகாம்

கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழை மக்களுக்காக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட குடிசை மற்றும் நத்தம் பகுதிகளில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது வீட்டை கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை நகரை குடிசைகள் இல்லாத நகரமாக்க, இத்திட்டத்தில் இதுவரை பயன் அடையாதவர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன்படி முகாம் நடைபெறும் மண்டல அலுவலகங்களுக்கு ஆவணங்களுடன் வந்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மத்திய, மாநில அரசின் மானிய தொகையினை பெறவும், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகாமுக்கு வரும் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், நிலத்தின் பட்டா, பத்திரம் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பட்டாதாரர் இறந்து இருப்பின் அவரின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

முகாம் நடைபெறும் தேதிகள்

முகாம் நடைபெறும் இடம் மற்றும் தேதிகள் விவரம் வருமாறு:–

1.கிழக்கு மண்டல அலுவலகம்–15–ந் தேதி, 2. வடக்கு மண்டல அலுவலகம்–16–ந் தேதி, 3.தெற்கு மண்டல அலுவலகம்–17–ந் தேதி, 4.மேற்கு மண்டல அலுவலகம்–18–ந் தேதி, 5. மத்திய மண்டல அலுவலகம்–19–ந் தேதி.

இவ்வாறு அந்த அறிக்கையில் மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்துள்ளார்.

 

18 பேருக்கு இலவச வீட்டு மனைகள் மேயர் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி               08.07.2013

18 பேருக்கு இலவச வீட்டு மனைகள் மேயர் வழங்கினார்

கோவை மாநகராட்சி வடவள்ளி 16, 17 வார்டுக்குட்பட்ட பெண்களுக்கு தமிழக முதல்–அமைச்சரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழா, இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வடவள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் தலைமை தாங்கினார். விழாவில் 7,249 பெண்களுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, கல்வீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை மேயர் செ.ம.வேலுசாமி வழங்கினார்

நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன், கே.ஆர்.ஜெயராமன், கோவை தெற்கு தாசில்தார் (பொறுப்பு) ரபிஅகமத், கவுன்சிலர்கள் குணசுந்தரி, மயில்சாமி,ஜெயந்தி, எஸ்.மணிமேகலை, துணை தாசில்தார் உமாமகேஸ்வரி, லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 09 July 2013 10:09
 

ராஜீவ் வீட்டு வசதித் திட்டம்:மேயர் தலைமையில் ஆலோசனை

Print PDF

தினமணி                28.06.2013

ராஜீவ் வீட்டு வசதித் திட்டம்:மேயர் தலைமையில் ஆலோசனை

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் ராஜீவ் வீóட்டு வசதித் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் அ. ஜெயா தலைமை வகித்தார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக், நகரப் பொறியாளர் ஆர். சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் திட்டம் குறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் வி. சண்முகசுந்தரம் பேசியது:

  நிதியமைச்சரைத் தலைவராகவும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிóத் துறை அமைச்சரைத் துணைத் தலைவராகவும் கொண்டு அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, தேசிய அளவிலான வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்புக் குழுவினரால் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  இதில் மாநில அரசு மானியம் 40 சதவிகிதம், மத்திய அரசு மானியம் 50 சதவிகிதம், பயனாளியின் பங்குத் தொகை 10 சதவிகிதம். ஆட்சேபகரமற்ற அரசு நிலங்களில் ஒழுங்கற்ற, நெருக்கமான அமைந்துள்ள குடிசைப் பகுதிகளை அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாற்றப்படும். ஆட்சேபகரமான நிலங்களில் வசித்து வரும் குடிசைப் பகுதிகளில் அதன் அருகில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும். தெருவிளக்கு, சாலை வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி மற்றும் மருத்துவ வசதியுடன் இந்தக் குடியிருப்புகள் அமைக்கப்படும்.

  இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புகள் திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளிலும் ஏற்கெனவே எடுக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து நகரப் பகுதிகளிலும் குடிசையில்லா நகராக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார் சண்முகசுந்தரம்.

  கூட்டத்தில், கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், எம். லதா,  ராஜீவ் வீட்டு வசதித் திட்ட கண்காணிப்புப் பொறியாளர் கே. ராஜீவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 9 of 69