Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

வீட்டுவசதி வாரியம் ரூ.1 கோடி வட்டி தள்ளுபடி! ஈரோட்டில் மூன்றாயிரம் பேர் பயன்

Print PDF

தினமலர்              21.08.2013

வீட்டுவசதி வாரியம் ரூ.1 கோடி வட்டி தள்ளுபடி! ஈரோட்டில் மூன்றாயிரம் பேர் பயன்

ஈரோடு: ஈரோட்டில், அரசு வழங்கிய வட்டி சலுகையால், வீட்டுவசதி வாரியத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வட்டி தள்ளுபடியால், மூன்றாயிரம் ஒதுக்கீட்டாளர்கள் பயனடைந்துள்ளனர். இச்சலுகை, நவம்பர், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சொந்தமாக வீடு வாங்க வசதியாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வருமானத்துக்கு ஏற்ற வகையில், தனித்தனியாகவும், அடுக்குமாடி குடியிருப்பாகவும், காலிமனையாகவும் விற்பனை செய்து வருகிறது. கிரயபத்திரத்துக்கான செலவோடு, வட்டியை கணக்கிடும் போது, வீட்டின் விலையை விட, வட்டி அதிகமாக விதிக்கப்பட்டது. எனவே, வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென, பயனாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, வட்டி தள்ளுபடி சலுகை வழங்கி அரசு ஆணை வெளியிட்டது. இச்சலுகையின் மூலம், தமிழகத்தில் வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள், 2013, மார்ச், 27ம் தேதி வரை, நிலுவை தொகையினை செலுத்தி வட்டி சலுகை பெற்று, 6,730 பேர் பயனடைந்துள்ளனர். நவம்பர், 30ம் தேதி வரை வட்டி சலுகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சம்பத்நகர், பெரியார் நகர், மாணிக்கம்பாளையம், கொல்லம்பாளையம், முத்தம்பாளையம், பள்ளிபாளையம், தாராபுரம், பெருந்துறை, நசியனூர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள், 3,000 பேர் பயன் அடைந்துள்ளனர். இதன் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வட்டி சலுகையாக ஒதுக்கீட்டாளர்கள் பெற்றுள்ளனர்.

ஈரோடு வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளரும், நிர்வாக அலுவலருமான மணி கூறியதாவது:

தற்போது, 215 அரசாணைப்படி, நவம்பர், 30ம் தேதி வரை வட்டி சலுகை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கிய இச்சலுகையால், பல ஆயிரம் ஒதுக்கீட்டாளர்கள் பயன்பெற்றுள்ளனர். அரசு வழங்கிய சலுகையினை, ஈரோடு வீட்டுவசதி பிரிவில், ஒதுக்கீடு பெற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஈரோடு வீட்டுவசதி பிரிவு அலுவலகத்திலோ, சம்பந்தப்பட்ட அலுவலரையோ நேரில் சந்தித்து சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம், என்றார்.

ஈரோடு வீட்டுவசதி பிரிவின் பல்வேறு திட்டங்களின் கீழ், வீடு பெற்றவர்களுக்கு, கிரயபத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. வாரியத்துக்கு தேவையான பணத்தை முழுமையாக செலுத்தினாலும், கிரயப்பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, இக்குறையை நிவர்த்தி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டுமென, பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

வீட்­டு­வ­சதி வாரி­யத்தின் 1,224 வாடகை வீடுகள் விரைவில் இடிப்பு புதிய ஒதுக்­கீ­டு­க­ளுக்கு தடை

Print PDF
தினமலர்        07.08.2013

வீட்­டு­வ­சதி வாரி­யத்தின் 1,224 வாடகை வீடுகள் விரைவில் இடிப்பு புதிய ஒதுக்­கீ­டு­க­ளுக்கு தடை


சென்னை :சென்னை சைதாப்­பேட்டை தாடண்டர் நகர், ராயப்­பேட்டை பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி ஆகிய இடங்­களில் உள்ள, 1,224 வாடகை குடி­யி­ருப்­பு­களை விரைவில் இடிக்க வீட்­டு­வ­சதி வாரியம் முடிவு செய்­துள்­ளது.

சென்­னையில் பட்­டி­னப்­பாக்கம், பீட்டர்ஸ் சாலை, லாயிட்ஸ் காலனி, அண்ணா நகர் உள்­ளிட்ட பல்­வேறு இடங்­களில் அரசு ஊழி­யர்­க­ளுக்­கான வீட்­டு­வ­சதி வாரிய வாடகை குடி­யி­ருப்­புகள் உள்­ளன.

அறி­விப்பு

அவற்றில், பட்­டி­னப்­பாக்­கத்தில் இருந்த, 1,112 வீடு­களை இடித்து விட்டு, 2,385 வீடு­க­ளுடன் அதிக தளங்கள் கொண்ட புதிய குடி­யி­ருப்பு கட்ட திட்­ட­மி­டப்­­பட்­டது. அந்த திட்டம் இறுதி செய்­யப்­பட்டு விட்டபோதிலும் கட்­டு­மான பணிகள் இன்னும் துவங்­கப்­ப­ட­வில்லை.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக, 2012 -– 13 நிதி ஆண்டில், சென்­னையில் தாடண்டர் நகர், பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி ஆகிய இடங்­களில் உள்ள, 2,522 வாடகை குடி­யி­ருப்­புகள், 1,770 சுய­நிதி குடி­யி­ருப்­புகள் என, மொத்தம், 4,292 வீடுகள் இடிக்­கப்­பட்டு புதிய குடி­யி­ருப்­புகள் கட்­டப்­படும் என, அரசு அறி­வித்­தது.

நட­வ­டிக்கை

அந்த அறி­விப்பு வெளி­யாகி இரண்டு ஆண்­டுகள் ஆகும் நிலையில், இது தொடர்­பான பணிகள் துவங்­கப்­ப­டாமல் உள்­ளன. இதனால், அந்த திட்­டங்கள் செயல்­ப­டுத்­தப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இது குறித்து வீட்­டு­வ­சதி வாரிய உய­ர­தி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

கடந்த, 2012- –13 நிதி ஆண்டில் அறி­விக்­கப்­பட்ட திட்­டங்­களில் முதல்­கட்­ட­மாக, 1,224 வீடு­களை இடிக்கும் பணிகள் விரைவில் துவங்­கப்­பட உள்­ளன. அவற்றில், தாடண்டர் நகரில், 638 வீடு­களும், பீட்டர்ஸ் கால­னியில், 346 வீடு­களும், லாயிட்ல் கால­னியில், 240 வீடு­களும் இடிக்­கப்­பட உள்­ளன.

அந்த வீடுகள் உள்ள குடி­யி­ருப்­பு­களில் புதி­தாக ஒதுக்­கீடு செய்ய தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த கட்­ட­டங்­களை இடிக்க மாந­க­ராட்­சி­யிடம் அனு­மதி கோரும் நட­வ­டிக்­கைகள் துவங்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு அவர் கூறினார்.
 

வீட்டுவசதி வாரியம் கட்டிய கட்டிடம்: மத்திய அரசு நிறுவனத்துக்கு விற்பனை ரங்கசாமியிடம் நிதி வழங்கப்பட்டது

Print PDF

தினத்தந்தி               01.08.2013

வீட்டுவசதி வாரியம் கட்டிய கட்டிடம்: மத்திய அரசு நிறுவனத்துக்கு விற்பனை ரங்கசாமியிடம் நிதி வழங்கப்பட்டது

புதுவை வீட்டுவசதி வாரியம் முருங்கப்பாக்கம் வீட்டுவசதி திட்டப்பகுதியில் புதியதாக 8 கடைகள் மற்றும் அலுவலக வளாகத்தை கட்டி முடித்துள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள 2 ஆயிரத்து 468 சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலக வளாகத்தினை மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் (மத்திய புள்ளியல் மற்றும் அமலாக்க அலுவலகம்) புதுச்சேரி அலுவலகத்திற்கு விற்பனை செய்ய வாரியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் சென்னை பிராந்திய அதிகாரிகளான துணை இயக்குனர் ஜெனரல் சுப்ரமணியன், துணை இயக்குனர் தயாளன் ஆகியோர் வீட்டுவசதி வாரிய தலைவர் மதி என்ற வெங்கடேசன், வாரிய செயலர் அகஸ்டின் லுசியன் தியாகு ஆகியோர் முன்னிலையில் முதல்–அமைச்சர் ரங்கசாமியிடம் ரூ.67லட்சத்து 90ஆயிரத்து 500–க்கான கேட்பு காசோலையை வழங்கினார்கள்.

 


Page 7 of 69