Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடு பெற்றோர் 30-க்குள் நிலுவைத் தொகை செலுத்த அறிவுரை

Print PDF

தினமணி             04.11.2013

வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடு பெற்றோர் 30-க்குள் நிலுவைத் தொகை செலுத்த அறிவுரை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களது நிலுவைத் தொகையை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் கடந்த ஜூன் 1-ஆம் தேதி மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன்படி, நவம்பர் 30-ஆம் தேதி வரை ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த ஏதுவாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதி பிரிவின் மூலம் மனைகள், தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள் இச்சலுகையைப் பயன்படுத்தி நிலுவைத் தொகையை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி கிரயப் பத்திரம் பெற்று பயனடையலாம்.

இத்தகவலை கோவை வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

 

மனைகள், வீடுகளுக்கு சலுகை வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி           24.10.2013

மனைகள், வீடுகளுக்கு சலுகை வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

மதுரை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் சாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மதுரை பிரிவு மூலம் ஒதுக்கீடு பெற்ற மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற நவம்பர் 30–ந்தேதி வரை நிலுவைத்தொகை செலுத்துபவர்களுக்கு இது பொருந்தும். மாதத்தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி, தாழ்த்தப்பட்ட, பழங்குடியிருனருக்கான ஒதுக்கீடுகளுக்கு விலையில் 10 சதவீத முன்வைப்பு தொகைக்கு மட்டும் வட்டி வசூலிப்பது போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தகவலுக்கு மதுரை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

அடுக்குமாடி கட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

Print PDF

தினபூமி                20.09.2013

அடுக்குமாடி கட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Mini(C)_100.jpg

சென்னை, செப்.20 - சென்னையில் கட்டப்பட்டுவரும் 12 ஆயிரம் அடுக்குமாடி கட்டப்பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளை அமைச்சர் வைத்தியலிங்கம் அறிவித்தினார்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.வைத்திலிங்கம்  தலைமையில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியக் கூட்ட அறையில் வாரியத்தின் பணிகள் குறித்து  வாரியத் தலைவர் கு.தங்கமுத்து, தங்ககலிய பெருமாள், அரசு செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை,  மேலாண்மை இயக்குநர் ஏ.சந்திரசேகரன்,  தலைமைப் பொறியாளர் சு. ஜெயபால், வாரிய செயலர் சு.பரமசிவம் மற்றும்  உயர் அதிகாரிகளுடனும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகளுடனும் ஆய்வு செய்தார்கள். கீழே கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

  • நந்தனம் அடுக்குமாடி வணிக மற்றும் அலுவலக வளாகம் திட்ட பணிகளை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
  • ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னை பெரும்பாக்கம் (மின் தூக்கி வசதியுடன்) மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம்  திட்டப்பகுதிகளில் ரூ.540 கோடி செலவில் கட்டி  முடிக்கப்பட்டு வரும் 12000 அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கட்டிட பணிகளை விரைந்து முடித்திடவும்,  பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார். 

மேலும், குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை  வசதிகளான குடிநீர் மற்றும் கழிவு நீர் மற்றும் மின் இணைப்பு போன்றவற்றின் பணிகள் குறித்து இஙரநநஆ  ேபசஉஆ அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிந்திட அறிவுறுத்தினார். 

இத்திட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு சாலை வசதிகளை விரைந்து முடிந்திட அறிவுறுத்தினார். 

  • பதிமூன்றாவது நிதிக் குழு திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி,மதுரை, கோவை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் 5243 குடியிருப்புகள் கட்டும் பணிகளையும் விரைந்து முடிந்திட  அறிவுறுத்தினார்.
  • அவசர சுனாமி மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பகுதிகளான நொச்சி நகர் மற்றும் துரைப்பாக்கம் திட்டப்பகுதிகளில் பயனாளிகளுக்கு விரைவில் ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
  • பொறியாளர், இளநிலை உதவியாளர், பண வசலாளர் மற்றும் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தகுதியான நபர்களை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
  • வாரியத்திற்கு நிலமாற்றம் செய்யப்பட்டுள்ள திட்டப்பகுதிகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு உடனடியாக விற்பனைப் பத்திரம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 


Page 6 of 69