Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

அரசு மருத்துவமனைகளிலும் காப்பீட்டு திட்டம்

Print PDF

தினமணி 01.08.2009

அரசு மருத்துவமனைகளிலும் காப்பீட்டு திட்டம்

சென்னை, ஜூலை 31: ஏழைகளுக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் அமலுக்கு வர உள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ். விநாயகம் தெரிவித்தார்.

ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மற்றும் அதற்குக் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ரூ.1 லட்சம் செலவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சையை இலவசமாகப் பெறும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற்று பலன் அடையத் தொடங்கியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக டாக்டர் எஸ். விநாயகம் கூறியதாவது:-

""சென்னை அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஏற்கெனவே பல ஏழை நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இதய சிகிச்சை, கல்லீரல் நோய் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை உள்பட 51 வகையான நோய்களில் பெரும்பாலானவற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம் குறிப்பிடும்படியான வசதிகள் சென்னை அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே உள்ளதால், இவற்றில் காப்பீட்டுத் திட்டம் இன்னும் 10 தினங்களுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்...: சென்னையைப் போன்று செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயிர் காக்கும் உயர் சிகிச்சையை ஏழைகள் பெறும் வசதிகள் விரைவில் செய்யப்படும். இதே போன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் வசதி செய்யப்படும்'' என்றார் டாக்டர் விநாயகம்.

சாதக அம்சம் என்ன? தமிழகம் முழுவதும் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 341 தனியார் மருத்துவமனைகளில் ரூ.1 லட்சம் வரையில் ஏழை நோயாளிகள் பலன் பெற முடியும்.

ஆனால், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவு ரூ.1 லட்சத்தைவிட அதிகரிக்கும் நிலையில், கூடுதல் தொகையை ஏழை நோயாளிகள் செலுத்த முடியாமல் திணற வேண்டியிருக்கும். ஆனால், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் சிகிச்சையைப் பெறும் நிலையில் கூடுதல் தொகையை ஏழைகள் செலுத்த வேண்டியிருக்காது என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

கலைஞர் காப்பீட்டு திட்டம்: சென்னையில் உயர் சிகிச்சை அளிக்கும் 63 தனியார் மருத்துவமனைகள் பெயர் பட்டியல் விவரம்

Print PDF

மாலை மலர் 31.07.2009

கலைஞர் காப்பீட்டு திட்டம்: சென்னையில் உயர் சிகிச்சை அளிக்கும் 63 தனியார் மருத்துவமனைகள் பெயர் பட்டியல் விவரம்

சென்னை, ஜூலை. 31-

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 கோடி ஏழை குடும்பங்களுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உன்னதமான இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ரூ.1 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தி தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரி சிறப்பு பிரிவுகளிலும் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகளிலும் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 337 தனியார் ஆஸ்பத்திரிகளில் உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னை நகரில் மட்டும் 63 தனியார் மருத்துவ மனை களில் உயிர் காக்கும் சிகிச்சையை பெற முடியும். சிகிச்சை பெறக்கூடிய தனியார் மருத்துவ மனைகளின் பெயர் பட்டி யலை விவரம் வருமாறு:-

1. .கே.என்.நர்சிங் ஹோம், கீழ்ப்பாக்கம்

2. .வி.எம்.மெடிக்கல் ரிசர்ஜ் பவுண்டேசன், மைலாப்பூர்

3. ஆகாஷ் மருத்துவமனை, திருவொற்றியூர்

4. அபிஜாய் மருத்துவமனை, பெரவள்ளூர்

5. ஆதித்யா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்

6. அம்மா மருத்துவமனை, சூளைமேடு

7. ஆனந்த் மருத்துவமனை, மணலி

8. அண்ணாமலை மருத்துவமனை, மேற்கு மாம்பலம்

9. அப்பாசாமி மருத்துவமனை, அரும்பாக்கம்

10. ஆரோக்கியா மருத்துவமனை, நெசப்பாக்கம்

11. பி.எம்.மருத்துவமனை, நங்கநல்லூர்

12. பில்ரோத் மருத்துவமனை, ஷெனாய்நகர்

13. பில்ரோத் மருத்துவமனை, ஆர்..புரம்

14. சி.எஸ்.. ரெய்னி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

15. சி.எஸ்.. கல்யாணி பொது மருத்துவமனை,

ராதாகிருஷ்ணன் சாலை

16. கேன்சர் இன்ஸ்டிடியூட், அடையார்

17. டாக்டர் மீரா நர்சிங்ஹோம், கெல்லீஸ்

18. ஹண்டே மருத்துவமனை, ஷெனாய்நகர்

19. ஜெ.வி.மருத்துவமனை, கோடம்பாக்கம்

20. கே.கே.ஆர். .என்.டி. மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்

21. கிருஷ்ணா கண் அன்டு இ.என்.டி. மருத்துவமனை,

தியாகராய நகர்

22. லேசர் அன்டு லேப்ராகோபிக் மருத்துவமனை,

ஜி.என்.செட்டி ரோடு

23. லைப்லைன் ரிஜிம் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்

24. மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ஜ் பவுன்டேசன்,

ராஜா அண்ணாமலைபுரம்

25. நாராயணா மருத்துவமனை, புரசைவாக்கம்

26. நியூஹோப் இந்தியன் மருத்துவமனை, அரும்பாக்கம்

27. நியூஹோப் மெடிக்கல் சென்டர், கீழ்ப்பாக்கம்

28. பிவித்ரா மருத்துவமனை, எருக்கஞ்சேரி

29. பிரியா நர்சிங் ஹோம், பழைய வண்ணாரப்பேட்டை

30. ரைட் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்

31. சக்தி மருத்துவமனை, திருவல்லிக்கேணி

32. சங்கரா கிட்னி மருத்துவமனை, குரோம்பேட்டை

33. எஸ்.பி.எஸ்.மருத்துவமனை, விருகம்பாக்கம்

34. சென் மருத்துவமனை, பெரம்பூர்

35. சூர்யா மருத்துவமனை, சாலிகிராமம்

36. ஸ்பீடு மெடிக்கல் சென்டர், அரும்பாக்கம்

37. ஸ்ரீதேவி மருத்துவமனை, கோயம்பேடு

38. ஸ்ரீவெங்கடேஸ்வரா சி.எம்.மருத்துவமனை, நங்கநல்லூர்

39. சுகம் மருத்துவமனை, திருவொற்றியூர்

40. துளசி கிருஷ்ணா நர்சிங்ஹோம், கோடம்பாக்கம்

41. வி.எஸ்.மருத்துவமனை, சேத்துப்பட்டு

42. ஜெ.எஸ்.பி. மருத்துவமனை, செங்கல்பட்டு

43. ஸ்ரீரெங்கா மருத்துவமனை, செங்கல்பட்டு

44. அஞ்சலி மருத்துவமனை, மடிப்பாக்கம்

45. தீபம் ஹெல்த் கேர் சென்டர், குரோம்பேட்டை

46. தீபம் மருத்துவமனை, மேற்கு தாம்பரம்

47. குளோபல் மருத்துவமனை அன்டு ஹெல்த் சிட்டி,

பெரும்பாக்கம்

48. லைப்லைன் மல்டி ஸ்பெஷால்டி, பெருங்குடி

49. லைப்லைன் மருத்துவமனை, மடிப்பாக்கம்

50. மியாட் மருத்துவமனை, மணப்பாக்கம்

51. பார்வதி மருத்துவமனை, குரோம்பேட்டை

52. ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் சென்டர், போரூர்

53. சி.எஸ்..மருத்துவமனை, காஞ்சீபுரம்

54. செட்டிநாடு மருத்துவமனை, கேளம்பாக்கம்

55. பாண்டியன் மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதூர்

56. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், முகப்பேர்

57. ஸ்ரீதேவி மருத்துவமனை, திருமங்கலம்

58. அம்மாயி கண் மருத்துமனை, அசோக்நகர்

59. பாலகிருஷ்ணா கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை

60. டாக்டர் ரவிசங்கர் கண் கிளினிக் அன்ட் நர்சிங் ஹோம்,

வேப்பேரி

61. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, கதீரட்ரல் ரோடு

62. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, தரமணி

63. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, நுங்கம்பாக்கம்

64. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, ஆவடி

65. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, அசோக்நகர்

66. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, பெரியார்நகர்

67. பாத்திமா கண் கிளினிக், சாந்தோம்

68. எம்.என்.கண் மருத்துவமனை, தண்டையார்பேட்டை

69. சங்கரா கண் மருத்துவமனை, பம்மல்

70. சங்கரா கண் மருத்துவமனை, கல்லூரிச்சாலை

71. ஸ்ரீனிவாஸ் கண் மருத்துவமனை, முகப்பேர்

72. உதி கண் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை

73. உமா கண் கிளினிக், அண்ணா நகர்

74. வாசன் கண்கேர் மருத்துவமனை, சைதாப்பேட்டை

75. வாசன் கண்கேர் மருத்துவமனை, வடபழனி

76. வாசன் கண்கேர் மருத்துவமனை, பெரம்பூர்

77. வாசன் கண்கேர் மருத்துவமனை, மடிப்பாக்கம்

78. வாசன் கண்கேர் மருத்துவமனை, அண்ணாநகர்

79. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, போரூர்

80. கே.கே.கண் ஹெல்த் கேர், தாம்பரம்

81. நிர்மல் கண்கேர் சென்டர், தாம்பரம்

82. வாசன் கண்கேர் மருத்துவமனை, குரோம்பேட்டை

83. வாசன் கண்கேர் மருத்துவமனை, திருவான்மியூர்

84. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, காஞ்சீபுரம்

85. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, திருவள்ளூர்

1 1

 

 

பாசனத்துக்காக மேட்டூர் அணை திறப்பு

Print PDF

தினமலர் 29.07.2009

 


Page 34 of 42