Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

ஜனவரி 7&9 வரை 7வது தெற்காசிய தண்ணீர் கண்காட்சி

Print PDF

தினகரன் 30.12.2009

ஜனவரி 7&9 வரை 7வது தெற்காசிய தண்ணீர் கண்காட்சி

Swine Flu

சென்னை, : சென்னை மற்றும் புறநகரில் வாகன உதிரி பாகங்கள், மருந்துகள், தோல், வேதிப்பொருட்கள் தயாரிப்பு தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. இதன் காரணமாக நீரின் தேவை அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் தரத்தின் தன்மை கூடுதலாக கவனிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பன்னாட்டு அளவிலான தண்ணீர், கழிவு நீரகற்றல் சாதன உற்பத்தியாளர்கள் சென்னையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சென்னையில் நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக, தெற்காசிய அளவிலான 7வது கண்காட்சி, நந்தம்பாக்கத்தில் ஜனவரி 7&9ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில், கடல்நீர் சுத்திகரிப்பு, தண்ணீர் மறுசுழற்சி சாதனங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படும். இதில், 25 நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இத்தகவலை, இஏ நிறுவன நிர்வாக இயக்குநர் சுனில் கோராவட் நேற்று தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 30 December 2009 08:02
 

சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி துவக்கி வைத்து கருணாநிதி பெருமிதம்

Print PDF

தினமலர் 23.12.2009

சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி துவக்கி வைத்து கருணாநிதி பெருமிதம்

சென்னை : ""நான் சென்னைக்கு வந்த காலத்தில் இருந்ததையும், தற்போது வளர்ந்துள்ள சென்னையையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன். நம் நகரம், நம் தெரு, நம் உடைமை என ஒவ்வொருவரும் நினைத்து மெரீனா கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி பேசினார்.சென்னை தீவுத்திடல் அண்ணா கலையரங்கில், இந்திய சுற்றுலா தொழில் பொருட்காட்சி நேற்று துவங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தலைமை வகித்தார்.

பொருட்காட்சியை துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:இந்த பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஓவியங்களை காண்பதற்காக நிச்சயம் மக்கள் அதிகளவில் வருவார்கள். 1971ம் ஆண்டு தான் முதன் முறையாக இந்த சுற்றுலா கண்காட்சியை நான் துவக்கி வைத்தேன்.ஆட்சி மாறினாலும் இந்த பொருட்காட்சி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர இது போன்ற பொருட்காட்சிகள் உதவுகின்றன. இதிகாசம், இலக்கியம், வரலாறுகள் சுற்றுலாவை வளர்க்கும் வகையிலேயே எழுதப்பட் டுள்ளன.ராமாயணத்தில், அயோத்தியை ராமன் நின்று பார்த்த இடம் குறிப் பிடப்பட்டுள்ளது. அந்த இடம் வேதாரண்யம் அருகே கோடியக் கரையில் இருக்கிறது. அங்குள்ள கல்வெட்டில் "ராமன் இந்த இடத்தில் இங்கு நின்று தான் அயோத்தியை கண்டான்' என எழுதப்பட்டுள்ளது.ராமன் அந்த இடத்தில் நின்று அயோத்தியை கண்டானா இல்லையா என்பது நமக்கு தெரியாது. ஆனால், அந்த கல்வெட்டில் உள்ள தகவலை காண மக்கள் கண்டிப்பாக அங்கு சென்று வருவர் என்பது உண்மை.

கோடியக்கரையில் ராமர் பாதம் இருக்கிறது என பொதுமக்கள், ஒருவர் சொல்லி ஒருவர் கேட்டு அந்த இடத்திற்கு சென்று வருவதால் சுற்றுலா வளர்கிறது.சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பூம்புகாரில் இருந்து கோவலனுடன் புறப்பட்டு மதுரை செல்கிறாள்.அங்கு கள்வன் பட்டம் பெற்ற கோவலன் கொலையுண்டான். கண்ணகி, பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்ததாக எழுதப்பட் டுள்ளது.கண்ணகி பிறந்து வளர்ந்த பூம்புகாருடன் கதையை முடிக் காமல் மதுரை வரை எழுதப்பட் டுள்ளது.அதனால், பொதுமக்கள் பூம்புகாரை மட்டுமின்றி மதுரை வரை சென்று சுற்றுலாவை வளர்த்துள் ளனர்.சுற்றுலா பெருகினால் தான் உலக மக்கள், நம்நாட்டிற்கு வந்து பொருளாதாரத்தை பெருக்குகின்ற நிலை ஏற்படும்.மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் சுற்றுலா குறைவு என்பதை புள்ளி விவரங் கள் கூறுகின்றன. நான் சென்னைக்கு வந்த காலத்தில் இருந்ததையும், தற்போது வளர்ந் துள்ள சென்னையையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன்.பதினைந்து மாதங்களுக்கு முன்பு, நகரில் விளம்பர பலகைகள் முளைத் திருந்தன. கட்டடங்களையும், மரங்களையும் மறைத்து இருந்தன. அதை அகற்ற உத்தரவிட்டேன். மீண்டும் விளம்பர பலகைகளை அனுமதிக்கக் கோரி சம்பந்தப் பட்டவர்கள், பத்திரிகைகளில் தொடர்ந்து விளம்பரங்கள் வெளியிட்டு எனக்கு கோரிக்கை வைத் தனர்.

நான் அவற்றை பார்க்காமல் குருடனாக இருந்து விட்டேன். அப்படி இருந்ததால் தான், தற் போதைய சென்னை நகரின் அழகை கண்டு ரசிக்க முடிகிறது. நீங்களும் கண்டு ரசித்துக் கொண் டிருக்கிறீர்கள். சென்னை மாநகராட்சி சென்னையை அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறது.மெரீனா கடற்கரை, 26 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப் பட்டுள்ளது. அதை அழகுபடுத்த முடியாத அளவுக்கு இருந்த குடிசைகள் அகற்றப்பட்டன.அந்த முயற்சிக்கு இடையூறாக இருந்தவர்களை சமாதானப் படுத்தித்தான், இவ்வளவு பெரிய கடற்கரையை அழகாக மாற்றுவதற்கு முடிந்தது.நம் நகரம், நம் தெரு, நம் உடைமை என ஒவ்வொருவரும் நினைத்து மெரீனா கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.தலைமை செயலர் ஸ்ரீபதி, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன், எம்.பி.,க்கள் கனிமொழி, இளங்கோவன் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்..,க்கள், சுற்றுலா பண்பாட்டுத்துறை செயலர் இறையன்பு உட்பட பலர் பங்கேற்றனர்.சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

Last Updated on Wednesday, 23 December 2009 11:59
 

காவிரி சீரமைப்புக்கு ரூ.5,100 கோடி திட்டம்: முதல்வர் தகவல்

Print PDF

தினமணி 23.12.2009

காவிரி சீரமைப்புக்கு ரூ.5,100 கோடி திட்டம்: முதல்வர் தகவல்

விடியோ கான்பரன்ஸ் மூலம், பவள விழா கோபுரம் அமைக்க அடிக்கல்லை நாட்டுகிறார் முதல்வர் கருணாநிதி.

சென்னை, டிச 22: காவிரி மற்றும் கிளை நதிகளில் சீரமைப்பு மற்றும் கரைகள் பலப்படுத்த ரூ.5,100 கோடியில் பெரிய திட்டம் ஒன்று மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் பவளவிழா ஆண்டை ஒட்டி, அதன் வலதுகரையில் குன்றின் மீது 75 அடி உயரத்தில் பவள விழா கோபுரத் தூண் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.

தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோகான்பரன்ஸ் மூலம் அடிக்கல்லை திறந்து வைத்து முதல்வர் பேசியதாவது:

மேட்டூர் அணையின் கீழே வெள்ளக் கால்வாய்களில் கிடைக்கும் கூடுதல் நீரைத் தடுத்து நிறுத்திட கல்லணையைத் தவிர வேறு அணைகள் இல்லை. எனவே கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கதவணை அமைக்க 5.2.2009-ல் ரூ.189 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்தக் கதவணையின் மூலம் தேக்கப்படும் வெள்ள நீர் வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடப்படும்.

மேலும் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை செப்பனிடும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.375.90 கோடிக்கு ஒப்புதல் தந்துள்ளது. இதில் மாநில அரசின் பங்காக ரூ.93.97 கோடியைத் தர தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

காவிரிப் பாசன விவசாயிகள் பயன்பெறுவதற்காக, திமுக அரசு அமையும்போதெல்லாம் காவிரியிலும், கிளை ஆறுகளிலும் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை விவசாயிகள் நன்கறிவர்.

2006-ல் இந்த அரசு அமைந்ததும் ரூ.35.80 கோடியில் தூர்வாரும் பணிகள்

நிறைவேற்றப்பட்டன. வரும் ஆண்டில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து, பொதுப்பணித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து, மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னதாகவே தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடித்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தொன்மைவாய்ந்த காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் அமைந்துள்ள மதகுகள், அணைகள், கதவணைகள் ஆகியவற்றைச் சீரமைத்திடவும், கரைகளைப் பலப்படுத்திடவும், வெள்ளக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் உதவிடும் வகையில் தமிழக அரசு ரூ.5,100 கோடியில் ஒரு பெருந்திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

மேட்டூர் அணையின் பவளவிழா நினைவாக 75 அடி உயரத்தில் பவள விழாக் கோபுரத் தூண் அமைத்து, மேட்டூருக்குச் சுற்றுலா வரும் பயணிகள் அதன் மேல் ஏறி நின்று மேட்டூர் அணையையும், நீர்த் தேக்கத்தின் விரிந்து பரந்துள்ள மாட்சியையும், அதன் அருகில் அமைந்துள்ள இயற்கைக் காட்சிகளையும், மேட்டூர் நகரின் தோற்றத்தையும் கண்டு மகிழ வகை செய்யும் திட்டத்துக்கு ரூ.1 கோடியை அரசு அனுமதித்துள்ளது என்றார் முதல்வர்.

 


Page 15 of 42