Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

ரிசர்வ் வங்கி திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் ^10 பிளாஸ்டிக் நோட்டு

Print PDF

தினகரன் 12.08.2010

ரிசர்வ் வங்கி திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் ^10 பிளாஸ்டிக் நோட்டு

புதுடெல்லி, ஆக. 12: நடப்பு ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறிய விவரம் வருமாறு:

முதலில் பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகளை தயாரித்து ஆண்டு இறுதிக்குள் மக்களிடையே புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்படும்.

மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் பிளாஸ்டிக் கரன்சிகள் தற்போது நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, ஹாங்காங் நாடுகளில் புழக்கத்தில் உள்ளன.

பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யும் போது ஆகும் செலவுகளை ஒப்பிட்டு பார்த்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையாக வேறுவகை நோட்டுகள் அச்சிட முடிவு செய்யப்படும். இந்தியாவில் தாளால் ஆன ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகிறது. இது தண்ணீரில் பட்டால் ஆயுள் குறைந்துவிடுகிறது. இதற்கு பதிலாக நீண்ட ஆயுள் கொண்ட பிளாஸ்டிக் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும். பிளாஸ்டிக் நோட்டுகளை போலியாக அச்சிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.

 

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அசுத்தமான ஆறுகளின் எண்ணிக்கை அதிகம்

Print PDF

தினகரன் 10.08.2010

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அசுத்தமான ஆறுகளின் எண்ணிக்கை அதிகம்

மும்பை, ஆக.10: நாட்டி லேயே மகாராஷ்டிராவில் தான் மாசுபட்ட ஆறுகள் அதிகம் இருப்பது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஓடும் ஆறுகளின் தண்ணீர் தரத்தை பரிசோதித்து அதன் அடிப்படையில் மாசுபட்ட ஆறுகளின் பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்து இருக்கிறது. இதன்படி மகாராஷ் டிராவில் 26 ஆறுகள் மாசுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆறுகளில் புனேயில் உள்ள முலா மற்றும் முத்தா, தானேயில் உள்ள கலு மற்றும் பட்சா, மும்பையில் மித்தி ஆறு ஆகியவையும் அடங்கும். இப்பிரச்னை யால் சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் கவலை அடைந் துள்ளனர்.

ஆறுகள் அசுத்தமடை வதற்கு தொழிற்சாலை களில் இருந்து வெளியேற்றப் படும் ரசாயன கழிவுகள் மட்டு மின்றி, மாநிலம் முழுவதிலும் நடந்து வரும் நகரமயமாக் கலும் இதற்கு ஒரு காரணம் என்று அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

வீடுகளில் இருந்து கொண்டுபோய் கொட்டப் படும் குப்பைகள், தொழிற் சாலை கழிவுகள் மற்றும் சில காரணங்களால் ஆறு கள் அசுத்தமடைவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ராய்காட் மாவட் டத்தில் ஓடும் குண்டலிகா, சோலாப் பூரில் ஓடும் நீரா மற்றும் நாக்பூர் வழியாக ஓடும் குன்ஹன் ஆகிய ஆறுகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு களால் அசுத்த மடைந்து விட்டன.

நாடுமுழுவதும் 150 ஆறுகள் மாசு அடைந்து இருப்பது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரிய வந் துள்ளது. நாட்டில் ஓடும் அனைத்து முக்கிய ஆறுகளும் இதில் அடங்கும். மகாராஷ்டிரா வுக்கு அடுத்த படியாக குஜராத்தில்தான் அதிக ஆறுகள் அசுத்த மடைந் துள்ளன. இந்த ஆறுகள் மாசுபட்டதற்கு தொழிற் சாலை கழிவுகளே முக்கிய காரணம்.

ஆறுகள் மாசு படுவதை தடுக்க தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் 20 மாநிலங்களில் உள்ள 38 ஆறுகளில் தான் இத்திட்டம் இப்போது செயல்படுத்தப் பட்டு வருகிறது.

மகாராஷ் டிராவில், பஞ்சகங்கா, தாபி, கிருஷ்ணா மற்றும் கோதா வரி ஆகிய நான்கு ஆறு களை சுத்தப் படுத்துவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களிலேயே மும்பைதான் மிகவும் அழுக் கானது என்று மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது மாசுபட்ட ஆறுகள் அதிகம் இருப்பதும் மகாராஷ்டி ராவில்தான் என ஆய் வறிக்கையில் கூறப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வறுமை 4.1 கோடி; வசதி 4.67 கோடி ஏழை குடும்பங்களைவிட வசதியானவர்கள் அதிகம்

Print PDF

தினகரன் 03.08.2010

வறுமை 4.1 கோடி; வசதி 4.67 கோடி ஏழை குடும்பங்களைவிட வசதியானவர்கள் அதிகம்

புதுடெல்லி, ஆக. 3: நம்நாட்டில் ஏழை குடும்பங்கள் எண்ணிக்கையை முதல்முறையாக வசதியான குடும்பங்கள் எண்ணிக்கை மிஞ்சியுள்ளது. இதை தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்) புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.

2009&10ம் ஆண்டு (மார்ச் 2010) நிலவரப்படி இந்திய குடும்பங்களின் வருமானம் பற்றி என்சிஏஇஆர் விரிவான கணக்கெடுப்பு நடத்தியது. அதில் வெளியான அம்சங்கள் வருமாறு:

2010 மார்ச் நிலவரப்படி நம்நாட்டில் ஏழ்மையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 4.1 கோடி. அதாவது, ஆண்டுக்கு

ரூ40,000க்கு குறைவாக வருமான உள்ள குடும்பங்கள் இவை. பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை 4.67 கோடி. அதாவது, ரூ2 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள் இவை. முதல்முறையாக, நாட்டின் ஏழை குடும்பங்கள் எண்ணிக்கையை அதிக வருவாய் கொண்ட குடும்பங்கள் மிஞ்சியுள்ளன. ரூ45,000 முதல்

ரூ1.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள் நடுத்தர வருவாய் கொண்டவையாக கருதப்படுகின்றன.

இந்த பிரிவில் 14.07 கோடி குடும்பங்கள் இப்போது உள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை சராசரியாக 22.84 கோடி. அதில் பாதிக்கும் மேல் நடுத்தர வருவாய் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மொத்த குடும்பங்களில் 62 சதவீதம்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய குடும்பங்களின் ஆண்டு வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வந்துள்ளது. 2001ம் ஆண்டில் 18.82 கோடி மொத்த குடும்பங்களில் உயர் வருமானம் கொண்ட குடும்பங்கள் 1.38 கோடி மட்டுமே இருந்தன. அது இப்போது 4.67 கோடியாக உயர்ந்துள்ளது. மாறாக, அப்போது ஏழை குடும்பங்கள் எண்ணிக்கை மிக அதிக அளவாக 6.52 கோடியாக இருந்தது.

நாட்டில் உள்ள ஏர் கண்டிஷன்கள் எண்ணிக்கையில் 53 சதவீதம், நடுத்தர வருவாய் பிரிவினரிடம் இருக்கிறது. மொத்த கிரெடிட் கார்டு எண்ணிக்கையில் 43 சதவீதத்தை இந்த பிரிவினர் வைத்துள்ளதாகவும் புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டில் 18.82 கோடி மொத்த குடும்பங்களில் அதிக வருமானம் கொண்ட குடும்பங்கள் 1.38 கோடி மட்டுமே இருந்தன. அது இப்போது 4.67 கோடியாக உயர்ந்துள்ளது.

 


Page 9 of 42