மாலை மலர் 23.07.2009
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் முக்கிய நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்
சென்னை, ஜூலை. 23-
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 51 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது பட்டியலிடப்பட்டுள்ளது.
1. இருதய ரத்த குழாய் அடைப்பு
2. இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை
3. பிறவி இருதய கோளாறு அறுவை சிகிச்சை
4. ஆஞ்சுயோ பிளாஸ்டிக் சென்ட் பொருத்துதல்
5. தற்காலிக, நிரந்தர பேஸ்மேக்கர் பொருத்துதல்
6. ரத்தக் குழாயில் கட்டி, அடைப்பு அறுவை சிகிச்சை
7. புற்று நோய் மருத்துவம்
8. சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை
9. சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை
10. சிறுநீரகத்தில் கல் அதிர்வு அறுவை சிகிச்சை
11. சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்
12. வலிப்பு நோய் அறுவை சிகிச்சை
13. முதுகு தண்டு வடம் விலகுதல் அறுவை சிகிச்சை
14. மூளையில் ரத்த குழாய் மாற்றம்
15. இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை
16. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை
17. எலும்பு முறிவு சிகிச்சை
18. கண் விழித்திரை விலகுதல் அறுவை சிகிச்சை
19. கருவிழி மாற்று அறுவை சிகிச்சை
20. விழித்திரை லேசர் அறுவை சிகிச்சை
21. கண்ணில் நீர் அழுத்தம் அறுவை சிகிச்சை
22. ரத்த குழாய்கள் அறுவை சிகிச்சை
23. இரைப்பை அறுவை சிகிச்சை
24. லேப்ராஸ் கோபிக் அறுவை சிகிச்சை
25. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
26. காது, மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை
27. கர்ப்ப பை புற்று நோய்
28. தைராய்டு அறுவை சிகிச்சை
29. விபத்தில் ஏற்படும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை
30. கோமா மற்றும் மூளை காய்ச்சல் மருத்துவம்
31. இதர பிறவி குறைபாடுகள் அறுவை சிகிச்சை.