Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF
தினமணி       08.04.2013

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

திருப்பாதிரிப்புலியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை 4 நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என கோட்டாட்சியர் ரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் கோட்டாட்சியர் ரா.லலிதா, திருவந்திபுரம் சாலையில் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் வரை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் 4 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
 

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF
தினமணி       08.04.2013

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு


திருவந்திபுரம் சாலையில் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் வரை சனிக்கிழமை கடலூர் கோட்டாட்சியர் ரா. லலிதா ஆய்வு மேற்கொண்டார். அப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் 4 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தவறினால் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
 

தேவிகாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி       07.04.2013

தேவிகாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆரணியை அடுத்துள்ள தேவிகாபுரத்தில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலை ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன .

தேவிகாபுரத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும், தனியார் மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஆலயமான கனககிரீஸ்வரர் கோயில் இங்குள்ளது. இக் கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பேரூராட்சிக்கான தகுதிகள் அனைத்தும் கொண்ட தேவிகாபுரத்தில் அதிக ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆரணி வட்டாட்சியர் அனுஷா தலைமையில் தேவிகாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஒரு சிலர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.

வில்வவிநாயகர் கோயிலை சுற்றியும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். போளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஐயாத்துரை, மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரன், சேகர், வருவாய் ஆய்வாளர் மனோகரன், நில அளவர்கள் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
 


Page 20 of 204