Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தாராபுரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் அகற்றம்

Print PDF
தினகரன்         17.04.2013
 
தாராபுரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் அகற்றம்

தாராபுரம்: தாராபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றப்பட்டது. தாராபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி, விநாயகர் கோயில் பகுதியில் சாலையோரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில்நகராட்சி மூலமாக ஆக்கிரமிப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டதில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இயந்திரங்களைக் கொண்டு இடித்து  அப்புறப்படுத்தினார்கள். இது குறித்து ஆணையர் சரவணக்குமார் கூறியதாவது:

நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் என்ஜிஜிஓ காலனி பகுதியில் 30 வருடங்களாக நகராட்சிக்கு சொந்தமான இட த்தில் அனுமதி இல்லாமல் வீடு கட்டபட்டு இருந்தது தெரியவந்தது.

தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் ஒரு வீட்டுக்கு மட்டும் அரசு பட்டா வழங்கி உள்ளது. அந்த பட்டாவை ரத்து செய்யுமாறு வருவாய்துறையிடம் முறையாக கோரப்பட்டுள்ளது. ரத்து செய்த பிறகு அனைத்தும் அகற்றப்படும் என்று கூறினார்.
 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

Print PDF
தினமணி        16.04.2013

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.


கடலூர் நகரில் பிரதானச் சாலைகளான நெல்லிக்குப்பம் சாலை, பாரதி சாலை, நேதாஜி சாலை, லாரன்ஸ் சாலை, சிதம்பரம் சாலை, திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள சாலைகள் என அனைத்துப் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன.

இதையடுத்து கோட்டாட்சியர் ரா.லலிதா தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து முதல் கட்டமாக திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் ப.காளிமுத்து தலைமையில் பொறியாளர் ரவி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனர்.

திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள திருவந்திபுரம் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சிறு கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதியிலும் இப்பணி தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

அண்ணா பஸ் நிலையத்தில் நடைமேடை கடைகள் அகற்றம்

Print PDF
தினமணி        13.04.2013

அண்ணா பஸ் நிலையத்தில் நடைமேடை கடைகள் அகற்றம்


நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த 29 கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் நடைமேடையில் கடைகள் வைக்கப்பட்டிருந்தன.

இது பயணிகள் செல்வதற்கு இடையூறாக இருப்பதாகக்கூறி இயற்கை வள பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் ஆர்.எஸ். லால்மோகன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நடைமேடையில் உள்ள 29 கடைகளை உடன் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கடைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. அண்ணா பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் கடைகள் அகற்றப்பட்டன.
 


Page 18 of 204