Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

லால்குடி கடைவீதியில் ஆக்கிரமிப்பு அகற்ற கெடு

Print PDF

தினகரன்          07.08.2013

லால்குடி கடைவீதியில் ஆக்கிரமிப்பு அகற்ற கெடு


லால்குடி, : லால்குடி கடைவீதியில் 10ம் தேதிக் குள் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக்கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி கடைவீதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடை யூறாக ஆக்கிரமித்து கடை போட்டு பலர் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இத்தகைய ஆக்கிரமிப்புகளை வரும் 10ம் தேதிக் குள் தாங்களே அகற்றிக் கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

இத்தகவலை லால் குடி பேரூராட்சி செயல் அலு வலர் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.

 

அருள்தாஸ்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி             07.08.2013

அருள்தாஸ்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை அருள்தாஸ்புரம் அய்யனார் கோவில் தெரு பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

 அருள்தாஸ்புரம் அய்யனார் கோவில் தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

 இதனால் 8 ஆவது வார்டில் இருந்து பாதாளச் சாக்கடை இணைப்புக் குழாய்கள், கழிவுநீரேற்று நிலையத்துடன் இணைப்பு கொடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.

 அதையடுத்து, அப் பகுதியை ஆய்வு மேற்கொண்ட மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தினார்.

 இதன்படி,   ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இரு வீடுகளை இடிப்பதற்கு  நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்ததால், அவ்வீடுகள் இடிக்கப்படவில்லை.
 

மகாலட்சுமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன்              01.08.2013

மகாலட்சுமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி 15வது வார்டு மகாலட்சுமி நகரையும், அண்ணாநகரையும் இணைக்கும் வீதி சந்திப்பில், உள்ள இடத்தில் காளியப்பன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், கட்டட ஆக்கிரமிப்பை அகற்றவும், அந்த பகுதி பொது மக்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். இதையடுத்து, திருப்பூர்  வருவாய்த்துறையினர் மேற்பார்வையில், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று, 15வேலம்பாளையம் போலீசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் இறங்கினர். இதையடுத்து, அந்த இடம் தனக்கு சொந்தமான இடம் என்றும்,  அந்த இடத்திற்கான பட்டா , என்னிடம் உள்ளது என்றும், எனவே ஆகிக்கிரமிப்பை அகற்றக்கூடாது என்றும் கூறி, திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில்  நேற்று மதியம் முதல் தனது மகன், மனைவி, மருமகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு காளீயப்பன் தரையில் அமர்ந்து  உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

இதனால் முதலாவது மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி மண்டல  உதவி ஆணையாலர் ஷபியுல்லா பேசுகையில், இரண்டு நாட்களில் அந்த இடத்தை அளவீடு செய்து, உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இந்த நிலையில்,  அரசு பணிகளைச் செய்வதை, காளியப்பன் தடுத்ததாக, மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் 15-வேலம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், காளியப்பனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினார்.

 


Page 9 of 204