Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

வீடு கட்ட மானிய கடன் உதவி

Print PDF

தினமலர் 07.06.2010

வீடு கட்ட மானிய கடன் உதவி

சிவகங்கை: பேரூராட்சிகளில் மனை பட்டா உள்ள ,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, வீடு கட்ட கடன் வழங்கப்படவுள்ளது. இதில் (.டபிள்யு. எஸ்., டைப்) வீடுகட்ட ஒரு லட்சம்; குறைந்த வருவாய் பிரிவுக்கு (எல்..ஜி., டைப்) ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படும். இரு பிரிவினருக்கும் 5 சதவீத மானிய வட்டி, ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டும் வழங்கப்படும். 1,200 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத் தில் பயன் பெற, "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கே.டி. எம்., காசிம் பில்டிங், ராமநாதபுரம்' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.

 

ரூ.30,000 மானியத்துடன் ஏழைகள் வீடு கட்ட கடன் வீட்டு வசதி இயக்குநர் தகவல்

Print PDF

தினகரன்    04.06.2010

ரூ.30,000 மானியத்துடன் ஏழைகள் வீடு கட்ட கடன் வீட்டு வசதி இயக்குநர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 4: நகர்புற ஏழைகள் வீடு கட்ட மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சிவராசு முன்னிலை வகித்தார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுதாகர், இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் வாசுதேவன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தண்டபாணி, வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் சாரங்கபாணி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசுகையில், ‘நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு ரூ.30,000 வரை மானியம் கிடைக்கும். வீட்டு மனை பட்டா உள்ளவர்கள் மட்டுமே கடன்பெற முடியும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மாத வருமானம் ரூ.5,000 வரை இருக்க வேண்டும். கடனை 15 ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதியில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம்’. இவ்வாறு, தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசினார்.

 

மானிய வட்டியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் : 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்து ஒருவர் கூட

Print PDF

தினமலர்        04.06.2010

மானிய வட்டியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் : 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்து ஒருவர் கூட

காஞ்சிபுரம் : தமிழகத்தில் மானிய வட்டியில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் பெற 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மானிய வட்டியில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை 5 சதவீதம் மானிய வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது.கூடுதல் கடன் தொகை பெறுபவர்களுக்கு மானிய வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெறுபவர் பெயரிலோ, மனைவி மற்றும் குழந்தைகள் பெயரிலோ சொந்த வீடு இருக்கக் கூடாது. வீட்டுமனைப் பட்டா உள்ளவர்கள் மட்டுமே திட்டத்தில் பயன்பெற முடியும்.இத்திட்டத்தில் கடன் பெற எண்ணிக்கை வரம்பு எதுவும் இல்லை. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மாத வருமானம் 5,000 ரூபாய் வரை இருக்க வேண்டும். வீட்டின் கட்டுமான அளவு 25 சதுர மீட்டர் அளவிருந்தால் வீடு கட்டும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.குறைந்த வருவாய் பிரிவினருக்கு மாத வருமானம் 5,000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 40 சதுர மீட்டர் வரை வீடு கட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.ஆனால், வட்டி மானியம் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படும். கடன்களை திரும்ப செலுத்தும் காலம், 15 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மானிய வட்டி பெறும் பயனாளிகளுக்கு ஒரு பாலமாக இருந்து விண்ணப்பங்களைப் பெற்று வங்கிகளுக்கு கடன் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ளவர்கள் இத்திட் டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம், வேலூர் வீட்டு வசதி வாரியப் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.தமிழகத்தில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் பெறப் பட்டுள்ளன. அவற்றை வங்கிக்கு அனுப்பியுள்ளோம். விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்பதற்காக மாவட்டம்தோறும் வங்கி அதிகாரிகள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களை அழைத்து பேசி வருகிறேன். இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்களும் திட்டத்தில் கடன் பெறலாம்.இத்திட்டம் 2008ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் கடன் பெறுபவர்கள் வீடு கட்டுவதால் வங்கியாளர்கள் பயப்படாமல் கடன் வழங்கலாம். கடனை திருப்பி செலுத்துபவர்கள் மாதம் 600 ரூபாய் தான் கட்ட வேண்டியிருக்கும்.

அவர்கள் வீட்டு வாடகை கொடுப்பதுபோல் கடனை திருப்பி செலுத்திவிடுவர். இந்த அற்புதமான திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு தர்மேந்திரா பிரதாப் யாதவ் கூறினார்.

காஞ்சிபுரத்தில் மானிய வட்டியில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுவரை விண்ணப்பித்தவர்களுக்கு கடன் வழங்கப்படாததற்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் விண்ணப்பங்களை முறையாக அனுப்பவில்லை. போதிய தகவல்களை தெரிவிப்பதில்லை. 70 வயதுள்ளவரிடம் எல்லாம் விண்ணப்பம் பெற்றுள்ளனர். அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

வங்கி விதிகளின்படிதான் கடன் வழங்க முடியும் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த தர்மேந் திரா பிரதாப் யாதவ், ""விண்ணப்பித்தவர்களில் 10 சதவீதம் பேர் கூட கடன் பெற தகுதியில்லாதவர்களா? இத்திட்டத்தில் கடன் பெறுவர்கள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் வீட்டை ஏலம் விடலாம். யாரும் வீட்டை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கண்டிப்பாக கடனை திருப்பி செலுத்துவர். எனவே வங்கி அதிகாரிகள் உடனடியாக கடன் வழங்க வேண்டும்,'' என்றார்.இதை ஏற்று விண்ணப்பங்கள் மீது கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விண்ணப் பங்களை ஒரே வங்கிக்கு அனுப்பாமல் அனைத்து வங்கிகளுக்கும் சமமாக பிரித்து அனுப்பும்படி கூறினர். அதை கூட்டுறவு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர

 


Page 20 of 34