Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

தி.மலை நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

Print PDF

தினகரன் 14.06.2010

தி.மலை நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

தி.மலை, ஜூன் 14: திருவண்ணாமலை நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

சுவர்ண ஜெயந்தி திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஆணையாளர் ஆர்.சேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். நகராட்சித் தலைவர் இரா.திருமகன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் சுவர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ், மகளிர் குழுக்கள், வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றுக்கு அரசு வழங்கும் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

வேலைவாய்ப்புகள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன், சமூக நலத்துறை திட்டங்கள் குறித்து எப்சிபாய், வங்கி கடனுதவி திட்டம் குறித்து இந்தியன் வங்கி மேலாளர் வெங்கடேஸ்வர குப்தா, பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்து இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் பேசினர்.

மேலும், மகளிர் குழு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். கூட்டத்தில், நகராட்சி கவுன்சிலர்கள் கார்த்திவேல்மாறன், குட்டி க.புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

வீடு கட்ட நிதியுதவி

Print PDF

தினமணி 11.06.2010

வீடு கட்ட நிதியுதவி

புதுச்சேரி, ஜூன் 10: புதுச்சேரியில் ஏழை எளியோர் கல் வீடு கட்ட நிதியுதவி அண்மையில் வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டது.

இதன்படி 2 மற்றும் 3-வது தவணைத் தொகையை, தொகுதி எம்எல்ஏ ஆர்.கே.ஆர்.அனந்தராமன் வழங்கினார். 25 குடும்பங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டது.

புதுவை குடிசை மாற்று வாரியத்தின் செயற் பொறியாளர் கலைமாறன், துணைப் பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலை

Print PDF

தினமலர் 09.06.2010

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலை

ஈரோடு: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு "எல் அண்ட் டி' நிறுவனத்தில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. டவுன் பஞ்சாயத்து பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வேலைவாய்ப்பற்றோருக்கு, சென்னை "எல் அண்ட் டி' நிறுவனம் மூலம் கட்டுமான பிரிவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சாரம் அமைத்தல், ஷட்டரிங் கம்பி வளைத்தல், கொத்தனார் பயிற்சி அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.., பயின்றவர்களுக்கு மின்னியல் பணியாளர் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி மற்றும் தங்குமிடம் இலவசம். பயிற்சி காலத்தில் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இலவச காலணி வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் "எல் அண்ட் டி' நிறுவனம் தனது கட்டுமானம் நடக்கும் இடங்களில் சப் கான்ட்ராக்டருக்கு கீழ், திறனுக்கு ஏற்ப 5,000 ரூபாய் வரை வேலைவாய்ப்பு வழங்கும். பயிற்சியில் சேர விரும்புவோர், டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலை சரி பார்த்து, செயல் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலெக்டர் சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

 


Page 18 of 34