Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் ஏழைகளுக்கு வருமான வரம்பு உயர்வு

Print PDF

தினமணி 02.08.2010

இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் ஏழைகளுக்கு வருமான வரம்பு உயர்வு

நாகர்கோவில், ஆக. 1: இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் ஏழைகளுக்கு வருமான வரம்பில் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் வருமான வரம்பை கிராமப் பகுதிகளுக்கு ரூ. 16 ஆயிரம் என்று இருந்ததை ரூ. 30 ஆயிரம் என்றும், நகர்ப்புற பகுதிகளுக்கு ரூ. 24 ஆயிரம் என்று இருந்ததை ரூ. 50 ஆயிரம் என்றும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

நடைபாதை வியாபாரிகளுக்கு பீ6 கோடியில் 1,188 கடைகள்

Print PDF

தினகரன் 29.07.2010

நடைபாதை வியாபாரிகளுக்கு பீ6 கோடியில் 1,188 கடைகள்

சென்னை, ஜூலை 29:அயனாவரம், பாலவாயல் சாலையில் நடைபாதை வியாபாரிகளுக்காக வணிக வளாகம் கட்டப்படுகிறது. இந்த பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறியதாவது: நடைபாதை வியாபாரிகளுக்காக மாநகராட்சி சார்பில் பாண்டிபஜாரில் பீ4.3 கோடி செலவில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதில் 692 கடைகள் இருக்கும். பாலவாயல் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக பீ1.23 கோடி செலவில் 16,400 சதுர அடியில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் 363 கடைகள் கட்டப்படுகிறது. ராயபுரம் எம்.சி.சாலையில் நடைபாதை வியாபாரிகளுக்கு பீ27 லட்சத்தில் 2,615 சதுர அடியில் 133 கடைகள் கட்டப்படுகிறது. 3 இடங்களிலும் சேர்த்து 1,185 கடைகள் கட்டும் பணி அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் முடியும். தி.நகரில் உஸ்மான் சாலை, பாண்டி பஜாரில் சிவப்பிரகாசம் சாலை, அயனாவரத்தில் பாலவாயல் சாலை, ராயபுரத்தில் மணியக்கார சத்திரத் தெரு ஆகிய இடங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான ஆணைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கவுள்ளார். பின்னர் மேயர் கூறியதாவது: நடைபாதை வியாபாரிகளுக்காக மாநகராட்சி சார்பில் பாண்டிபஜாரில் பீ4.3 கோடி செலவில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதில் 692 கடைகள் இருக்கும். பாலவாயல் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக பீ1.23 கோடி செலவில் 16,400 சதுர அடியில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் 363 கடைகள் கட்டப்படுகிறது. ராயபுரம் எம்.சி.சாலையில் நடைபாதை வியாபாரிகளுக்கு பீ27 லட்சத்தில் 2,615 சதுர அடியில் 133 கடைகள் கட்டப்படுகிறது. 3 இடங்களிலும் சேர்த்து 1,185 கடைகள் கட்டும் பணி அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் முடியும். தி.நகரில் உஸ்மான் சாலை, பாண்டி பஜாரில் சிவப்பிரகாசம் சாலை, அயனாவரத்தில் பாலவாயல் சாலை, ராயபுரத்தில் மணியக்கார சத்திரத் தெரு ஆகிய இடங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான ஆணைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கவுள்ளார். இவ்வாறு மேயர் கூறினார். வி.எஸ். பாபு எம் எல் ஏ, மற்றும் மா நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்

 

நேரு நகர்ப்புற திட்டத்தின் கீழ் 63 நகரங்களில் அடிப்படை வசதி மேம்பாடு: மக்களவையில் அமைச்சர் தகவல்

Print PDF

தினமணி 29.07.2010

நேரு நகர்ப்புற திட்டத்தின் கீழ் 63 நகரங்களில் அடிப்படை வசதி மேம்பாடு: மக்களவையில் அமைச்சர் தகவல்

புது தில்லி, ஜூலை 28: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை உள்பட நாடு முழுவதும் 63 நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாக மக்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் நாராயணசாமி மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்திருந்தார்.

மத்திய, மாநில தொல்பொருள் ஆய்வுத் துறைகளின் கட்டுப்பாட்டில் இல்லாத நினைவுச் சின்னங்களை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் பாதுகாக்கவும் மாநிலங்களின் நகர திட்டமிடல் சட்டம் அனுமதிக்கிறது. போர், நகரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல நினைவுச் சின்னங்கள் அழிந்துவிட்டன என்று அவர் தெரிவித்திருந்தார்.

 


Page 15 of 34