Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

பெங்களூர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்தப்படும்

Print PDF

தினகரன் 07.09.2010

பெங்களூர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்தப்படும்

பெங்களூர், செப். 7: மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.

மாநில துப்புரவு தொழிலாளர் வார விழா நேற்று தொடங்கி வரும் 13ம் தேதிவரை கொண்டாடப்படுகிறது. இதன் துவக்க விழா பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மேயர் எஸ்.கே.நடராஜ், சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதை தொடர்ந்து அவர் பேசியதாவது:

பல இன்னங்களை தாங்கி மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் புனித தொழில் செய்யும் நீங்கள், வாழ்க்கையில் எந்த பலனும் அனுபவிக்காமல் அனுபவிக்கிறீர்கள். உங்களின் உண்மையான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும்.

மக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கும் நீங்கள், உங்கள் உடல் நலத்தை கெடுத்து கொள்கிறீர்கள். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மாநகராட்சியின் கடமை என்பதில் மாற்று கருத்தில்லை.

மாநகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்வது தொடர்பாக அடுத்த மாதம் முதல் புதிய டெண்டர் வழிமுறை பின்பற்றப்படும். சிங்கிள் டெண்டர் முறையில் வார்டுக்கு ஒரு ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்படும்.

இவர்கள் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தேவையான சம்பளம், கை குளோஸ், புட், மாஸ்க் உள்பட தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகள் வைக்கப்படும். இதை ஒப்புக்கொண்டு டெண்டர் எடுக்க முன் வருவோருக்கு மட்டுமே பணி ஒப்படைக்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.

 

மானிய வட்டியுடன் வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்தோர் கவனிக்க

Print PDF

தினமணி 06.09.2010

மானிய வட்டியுடன் வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்தோர் கவனிக்க

மதுரை, செப். 5: நகர்ப்புற ஏழை மக்களுக்கான மானிய வட்டியுடன் கூடிய வீடு கட்ட கடன் பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் வங்கிக்கு அளிக்க வேண்டிய முறையான விண்ணப்பப் படிவத்தை நேரில் பெற்று முழுமையாகப் பூர்த்தி செய்து, மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் மேல்நடவடிக்கைக்காக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இது தொடர்பாக க.அசோகன், வரைவு அலுவலர், மதுரை மாவட்டம் (94437 96786), தி.தர்மர், வரைவு அலுவலர், திண்டுக்கல் மாவட்டம் (93452 00708), வா.பாலசுப்பிரமணியன், வரைவு அலுவலர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டம் (99941 68214) ஆகியோரை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இந்தத் தகவலை வீட்டு வசதி வாரிய, மதுரைப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பி.சுப்பிரமணியன் ஓர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

ஏழை மக்கள் வீடு கட்ட வட்டிச் சலுகையுடன் கடன் உதவி

Print PDF

தினமணி 28.04.2010

ஏழை மக்கள் வீடு கட்ட வட்டிச் சலுகையுடன் கடன் உதவி

திருவள்ளூர், ஆக. 24: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற ஏழை மக்களுக்கு வட்டிச் சலுகையுடன் கூடிய வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சொந்த மனை உள்ள ஏழைகள் வீடு கட்ட வீட்டுவசதி வாரியம் கடன் உதவி வழங்குகின்றது.

நலிவுற்ற பிரிவினருக்கு கடனுதவி: இத்திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு வீடு கட்ட கடன் உதவி பெற மாத வருமானம் ரூ.5 ஆயிரத்துக்குள் இருத்தல் வேண்டும். ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் கடன் உதவியில் 5 விழுக்காடு சலுகை வழங்கப்படும்.

÷கடன் தொகை பெற அரசு வழங்கிய இலவச பட்டா, பட்டா நிலம் விண்ணப்பதாரரின் பெயரிலேயே இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 25 சதுர மீட்டரில் வீடு கட்ட வேண்டும். வீட்டு மனை நகராட்சிப் பகுதிக்கு உட்பட்டோ, பேருராட்சிக்கு உட்பட்டதாகவோ இருக்க வேண்டும்.

குறைந்த வருவாய் பிரிவினருக்கு கடன் உதவி: குறைந்த வருவாய் பிரிவினருக்கு மாத வருமானம் ரூ.5001 முதல் ரூ.10 ஆயிரம் வரையில் இருத்தல் வேண்டும். இதில் ரூ.1.60 லட்சம் கடன் வழங்கப்படும். இத் தொகையில் 1 லட்சம் வரை வட்டியில் 5 விழுக்காடு வட்டிச் சலுகை வழங்கப்படும்.

÷40 சதுர மீட்டருக்கு குறையாமல் வீடு கட்ட வேண்டும். வீட்டு மனை நகராட்சிப் பகுதிக்கு உட்பட்டோ, பேருராட்சிக்கு உட்பட்டதாகவோ இருக்க வேண்டும். வீடுகள் கட்ட அந்தந்தப் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கடன் பெற்றுத் தர தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தேவையான ஆவணங்கள்: வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி சிறப்பு திட்டக் கோட்டம் 1: தொலை பேசி எண் 23715560, 9940498968: சிறப்பு திட்டக் கோட்டம் 2: 24747557, 9677033277. கலைஞர் கருணாநிதி நகர் கோட்டம்: 23713177, 9940498953 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


Page 13 of 34