Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வீடுகட்ட பெறும் கடனுதவிக்கு ‘வட்டி மானியம்’ அளிக்க புதுதிட்டம்

Print PDF

தினகரன்             27.10.2010

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வீடுகட்ட பெறும் கடனுதவிக்கு வட்டி மானியம்அளிக்க புதுதிட்டம்

மதுரை, அக். 27: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வீடு கட்ட பெறும் வங்கி கடனுதவிக்கான வட்டிக்கு மானியம் அளிக்கும் புதுதிட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சொந்த வீடு இல்லாத நபர்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எட்டும்வகையில் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் வீடு கட்ட வட்டி மானியம் அளிக்கும்(ஐஎஸ்எச்யுபி) என்ற புதுதிட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டுவசதி வாரியம் மூலம் நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் 270 சதுர அடியில் வீடு கட்டுபவர்களுக்கு ரூ. ஒரு லட்சமும், 400 சதுர அடியில் வீடு கட்டுபவர்களுக்கு ரூ.1.60 லட்சமும் வட்டி மானியமாக அளிக்கப்படவுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ள சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட விண்ணப்பித்தால் அவர்களுக்கு கடனுதவிக்கான வட்டியில் மானியம் அளிக்கப்படும்.

குடிசை மாற்று வாரிய மதுரை மண்டல செயற்பொறியாளர் ஜெயபால் கூறியதாவது:

மதுரை மாவட்டத்திற்கு மட்டும் 2 ஆயிரம் வீடுகளுக்கு இத்திட்டத்தின்கீழ் கடனுதவிக்கான வட்டியில் மானியம் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமும், ஆயிரம் வீடுகளுக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலமும் வட்டி மானியம் அளிக்கப்படவுள்ளது.

ரூ. ஒரு லட்சம் வட்டி மானியம் கோருபவர்கள் 20 ஆண்டுகளுக்கு மாதத் தவணையாக ரூ. 580ம், ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் வட்டி மானியம் கோருபவர் கள் 20 ஆண்டுகளுக்கு மாதத்தவணையாக ரூ. ஆயிரத்து 80ம் செலுத்த வேண்டும்.

இடத்திற்குரிய பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் அடமானம் செய்து கொடுக்க வேண்டும். ப்ளான் அப்ரூவல், லீகல் ஒப்பீனியன், சார்பதிவாளர் அலுவலக ஸ்டாம்ப் டியூட்டி போன்றவைக்கும் இத்திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர் களுக்கு பெரிதும் பயனளிக்கும். முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் பொட்டபாளையத்தில் 100 நபர்கள், தேனி மாவட்டம் போடியில் 208 நபர்களுக்கு வட்டிமானியம் அளிக்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, என்றார்.

 

வீடு கட்டினால் வட்டிக்கு மானியம்

Print PDF

தினமலர்                 27.10.2010

வீடு கட்டினால் வட்டிக்கு மானியம்

மதுரை : வீடு கட்டினால் வட்டிக்கு மானியம் வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. "குடிசைகள் இல்லா தமிழகம்' எனும் கொள்கை முடிவுப்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டம் குடிசை மாற்று வாரியம் மூலம் மாநில அளவில் செயல்படுகிறது. அடுத்ததாக வீடு கட்டினால் வட்டிக்கு மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 270 சதுர அடி பரப்பளவில் வீடு கட்ட வங்கிக்கடன் ஒரு லட்சம் ரூபாய். 400 சதுர அடி பரப்பளவில் வீடு கட்ட வங்கிக்கடன் ஒரு லட்சத்து 60 ரூபாய். இதற்காக, கனரா, ..பி., மற்றும் இந்தியன் வங்கிகளுடன், குடிசை மாற்று வாரியம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கடன் தொகைக்கான வட்டிக்கு மானியம் வழங்கப்படும்.

ஒரு லட்சம் மற்றும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவோருக்கு மூன்று தவணைகளில் பணம் பட்டுவாடா செய்யப்படும். ஒரு லட்சம் கடன் பெறுவோர் மாதம் 580 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளும், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் பெறுவோர் மாதம் 1080 ரூபாய் வீதம் 20 ஆண்டு தவணை செலுத்த வேண்டும். நிலத்திற்கான பட்டா, பத்திரம், பத்திரப்பதிவு ஆவணங்களுடன், குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். மாவட்டம் தோறும் 20 ஆயிரம் வீடுகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீடு கட்ட வட்டிக்கு மானியம் வழங்கப்படும்.

Last Updated on Wednesday, 27 October 2010 05:35
 

மானிய வட்டியில் வீட்டு கடன் விண்ணப்பம் வினியோகம்

Print PDF

தினகரன்                     26.10.2010

மானிய வட்டியில் வீட்டு கடன் விண்ணப்பம் வினியோகம்

திருவொற்றியூர், அக்.26: நகர்புற ஏழை மக்கள் மானிய வட்டியில் கடன் பெற்று வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வீட்டு வசதி வாரியம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் வீட்டு கடன் பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர் விம்கோ நகரில் நேற்று நடந்தது.

வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கினார். இத்திட்டத்தின் விவரம், கடன் பெறுவது எப்படி, சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றி அதிகாரிகள் விளக்கமளித்தனர். நகராட்சி துணை தலைவர் ராமநாதன், கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், தெபோரா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஆதிகுருசாமி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 26 October 2010 09:42
 


Page 8 of 34