Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முத்திரைத் தீர்வையில் விலக்கு: ஸ்டாலின்

Print PDF

தினமணி 19.12.2009

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முத்திரைத் தீர்வையில் விலக்கு: ஸ்டாலின்


சென்னை, டிச.18: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முத்திரைத் தீர்வையில் இருந்து விலக்கு அளித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகர்ப்புறத்தில் அமைந்துள்ள சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. 2008}09}ம் நிதியாண்டில் 1.5 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.150 கோடி வழங்கப்பட்டது.

சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்த, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே வணிக வளாகம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் போது சமர்ப்பிக்கும் ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை செலவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என பெரும்பாலான சுய உதவிக் குழுக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனிடையே, கூட்டமைப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்புகளுக்கு முத்திரை தீர்வைக்கு முழு விலக்கு அளிக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்பின் மேம்பாட்டுக்காக வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் போது சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுக்கான முத்திரை தீர்வைக்கான செலவினை மேற்கொள்வதில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்படும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated on Saturday, 19 December 2009 07:49
 

சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்கான மானியம் உயர்வு

Print PDF

தினமலர் 02.11.2009

 

338 கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை

Print PDF

தினமணி 2.11.2009

338 கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை

ஆம்பூர், நவ.1: ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உள்ளாட்சி தின விழாவில் 338 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித் தொகையாக ரூ.10.14 லட்சம் வழங்கப்பட்டது.

ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் தலைமை வகித்து கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நகராட்சி ஆணையர் தா. உதயராணி, நகர்மன்ற துணைத் தலைவர் தமிழரசி, நகராட்சிப் பொறியாளர் இளங்குமரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் 3 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் குறித்த தகவல் பலகை திறந்து வைக்கப்பட்டது. கையேடு வெளியிடப்பட்டது.

முன்னதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற உள்ளாட்சி தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

 


Page 34 of 41