Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

பெண்கள் அனைத்து துறைகளிலும் அச்சமின்றி முன்னேறி வருகிறார்கள்

Print PDF
தினகரன்      05.04.2013

பெண்கள் அனைத்து துறைகளிலும் அச்சமின்றி முன்னேறி வருகிறார்கள்


திருப்பூர்: பெண்கள் அச்சமின்றி அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள் என திருப்பூரில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் மேயர் விசாலாட்சி பேசினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சேவ் மற்றும் திருப்பூர் வட்டார மகளிர் கூட்டமைப்புகள் இணைந்து நடத்திய “தொழில் வளம் பெருக்குவதில் மகளிர் பங்கு“ என்னும் தலைப்பில் மகளிர் மாநாடு திருப்பூர், வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சேவ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் அலேசியஸ் தலைமை வகித் தார்.ரோஸ்லின் தங்கம் வரவேற்றார். கூட்டமைப்பின் பொறுப்பாளர் கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் நாகபிரபா, இணைப்பதிவாளர் ராமகிருஷ்ணன், கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு இயக்குனர் தியாகராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மேயர் விசாலாட்சி கலந்துகொண் டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, ‘நாம் வாழும் நாட்டை தாய்நாடு என்கிறோம், பேசும் மொழியை தாய்மொழி என்கிறோம், ஓடும் நதிகள் எல்லாம் பெண் பெயரால்தான் அழைக்கப்படுகின்றன.

கல்வி, செல்வம், வீரம் என நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாமே பெண்கள்தான். எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்  உல கில் தாய்வழி சமூகம்தான் இருந்தது. அடர்ந்த காடுகளில் பெண்கள் தலைமையில்தான் அரசாங்கமே நடந்தது. அன்றே பெண்கள் வேட்டையாடுவதிலும்,வீடு கட்டுவதிலும், முன்னணியில் இருந்தனர். ஆதிகாலத்தில் மனித சமூகத்தின் மூலமாகவும், பெரும் சக்தியாகவும் பெண்கள் தான் இருந்தனர்.

பின்னால்  படிய, படிய அந்த செல்வாக்கு குறைய தொடங்கியது. ஆனால் அது மீண்டும் இப்போது மலர தொடங்கிவிட்டது. ஆட்டோ, பஸ், லாரியிலிருந்து ரயில், விமானம் வரை எல்லா வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருந்து சிறப்பாக பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் என்ற பெண் 6 முறை விண்வெளிக்கு சென்று பெண்குலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கல்வி, வேலை, சுயதொழில், கலை, இலக்கியம் என அனைத்து துறைகளிலும் இன்றைக்கு பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள். நிலவுக்கு சென்றுவரக்கூடிய அளவுக்கு துணிச்சல்மிக்கவர்களாக பெண்கள் வளர்ந்து வருகிறார்கள்.

கருவறையை கொண்ட ஆலயமும், பெண்களும் வணங்கப்பட வேண்டியவர்கள். பெண்கள் அச்சமின்றி தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். தோளில் துப்பட்டா போடும் பெ ண்கள் தேவைப்பட்டால் துப்பாக்கியும் போடும் அளவுக்கு துணிச்சல்மிக்கவர்களாக வளர்ந்து வருகிறார்கள்’ என பேசினார். விழாவையொட்டி நடத்தபட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மேயர் விசாலாட்சி பரிசுகள் வழங்கினார். விழா முடிவில் கூட்டமைப்பின் பொறுப்பாளர் தனலட்சுமி நன்றியுரையாற்றினார்.
 

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் பெண்கள்!

Print PDF
தினமணி      05.04.2013

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் பெண்கள்!


பெண்கள் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி வியாழக்கிழமை பேசினார்.

திருப்பூர் "சேவ்' அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் திருப்பூர் வட்டார மகளிர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் "தொழில் வளம் பெருக்குவதில் மகளிர் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், மகளிர் குழுக்களுக்கு பரிசு வழங்கி மேயர் அ.விசாலாட்சி பேசியது:

மனித சமுதாயத்தின் ஆதாரமாக விளங்கிய பெண் சமுதாயம், இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக தனது நிலையை இழந்து சமுதாயத்தில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும், தற்போது பெண்கள் தன் உரிமையை உணர்ந்து திறமையை நிலைநாட்டி வருகின்றனர்.

ஆட்டோ முதல் விமானம் ஓட்டுவது வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

தொழில் முனைவோர்களாக, அரசியலை வழிநடத்துபவர்களாக பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

சேவ் அமைப்பின் இயக்குநர் ஆ.அலோசியஸ்:

பெண்கள் வீட்டில் மட்டுமல்லாமல் அரசியலிலும், சமூக அநீதிகளிலும் சரியான மாற்றங்கள் நிகழ்வதில் முக்கிய பங்கு வகிப்பது பாராட்டுக்குரியது. பெண்களின் உரிமை மறுக்கப்படும்போதெல்லாம், தெருவுக்கு வந்து போராடுவோம் என்ற பெண்களின் மன எழுச்சி வரவேற்கத்தக்கது என்றார்.

கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் எஸ்.ராமகிருஷ்ணன்:

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிக் கிளைகள் மூலமாக 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2013 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 1,148 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.22.52 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகள் மூலமாக 463 குழுக்களில் உள்ள 3 ஆயிரத்து 745 பேருக்கு ரூ.8.36 கோடி மதிப்பில் சுழல் நிதி, நேரடி மற்றும் பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சேவ் அமைப்பு மூலமாக 91 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.15 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஸ்ரீராம்:

97 சதவீத பெண்கள் வங்கிக் கடனை திரும்பச் செலுத்தி வருவதால், மகளிர் குழுக்களுக்கு கூடுதல் கடன் வழங்க வங்கிகள் முடிவு செய்துள்ளது. தொழில் வருவாயில் இருந்து ஒரு பகுதியை பெண்கள் சேமிக்க வேண்டும் என்றார்.

முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால்:

வீட்டுக்கு குறைந்தது ஒருவருக்காவது வங்கி சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். அரசின் அனைத்து பணப் பயன்களும் வங்கிக் கணக்கு மூலமாக வந்தடைகிறது என்றார்.

கடன் ஆலோசகர் பி.குப்புசாமி, ரோஸ்லின் தங்கம், கூட்டமைப்பு பொறுப்பாளர் தனலட்சுமி உள்பட 2,500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
 

வாழ்க்கையில் முன்னேற்றம் காண பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் நாகை கலெக்டர் முனுசாமி பேச்சு

Print PDF
தினத்தந்தி        04.04.2013

வாழ்க்கையில் முன்னேற்றம் காண பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் நாகை கலெக்டர் முனுசாமி பேச்சு


வாழ்க்கையில் முன்னேற் றம் காண பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் முனுசாமி கூறினார்.

பெண்கள் தின விழா


நாகையில் சினேகா தொண்டு நிறுவனம் சார்பில் உலக பெண்கள் தின விழா நடைபெற்றது. நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:பொதுவாக பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்ப வர்கள் என்ற நிலை மாறி பல் வேறு துறைகளில் பொறுப் பான பல துறைகளில் முன் னேறி வருகின்றனர். வாழ்க்கை யில் நல்ல முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கல்வியில் பெண்கள் நல்ல முறையில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது மாறி வரும் சூழ்நிலையில் மாணவர் களைவிட மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கின்றனர். நல்ல புத்திசாலியாகவும் வளர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் சுய உதவிக் குழுக்கள் வந்த பிறகு பெண்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள னர். கணவன் பொருளீட்ட முடியாத ஒரு சூழ்நிலையில் சுயமாக தொழில் செய்து சம்பாதித்து குடும்பத்தை காப் பாற்றும் அளவிற்கு பெண்கள் முன்னேறி உள்ளனர். சுய உதவிக் குழுக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல் வங்கி களும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் ஒரு கோடி வரை கடனுதவி பெற்ற சுய உதவிக் குழுக்களும் உள்ளன.

அரசு உதவி

சுய உதவிக் குழுக்களை பொறுத்தவரை வெறும் வட்டித் தொழில் மட்டும் செய்யாமல் ஒரு தொழிலை தொடங்கி நடத்தினால் நல்ல லாபம் பெறலாம். அரசு உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

முதல்அமைச்சர் பெண் களை மையமாக வைத்துதான் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். விலை யில்லா கறவைப் பசு, விலை யில்லா வெள்ளாடுகள் வழங் கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பெண்கள் வாழ் வாதாரம் முன்னேற்றம் அடைவதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். விலையில்லா ஆடு, மாடுகளை முறையாக பராமரித்தால் ரூ.2 லட்சம் வரை பொருள் சேர்க்கலாம்.

திறமை

பொதுவாக பெண்களிடம் தான் பொறுப்புணர்வு அதி கம் உள்ளது. சுய தொழில் செய்து சம்பாதிக்கவும், பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும், குழந்தைகளை படிக்க வைத்து குடும்பத்தை கட்டுப்பாடுடன் நிர்வகிக்கவும் பெண்கள் திறமை படைத்த வர்கள். நாகை மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதால் பெண்கள் கல்வி யில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் முனுசாமி கூறினார்.

உதவித்தொகை


விழாவில் ஐ.டி.ஐ.யில் படிக் கும் உறுப்பினர்களின் குழந் தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக தலா ரூ.500 வீதம் 458 பேருக்கு ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் முனுசாமி வழங்கினார்.

விழாவில் சினேகா தொண்டு நிறுவன முதன்மை ஒருங்கிணைப்பாளர் ராசேந் திரன், தலைவர் ரமணிமேத்யூ, மாநில செயற் குழு உறுப்பினர் மதுரை பவளம், சீர்காழி தொகுதி கள ஒருங்கிணைப் பாளர் தமயந்தி, பாலியல் நீதித்துறை தலைவர் வனஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 4 of 41