Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

வள்ளுவர் கோட்டம் அருகில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பிரமாண்ட வணிக வளாகம்

Print PDF

தினகரன் 09.08.2010

வள்ளுவர் கோட்டம் அருகில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பிரமாண்ட வணிக வளாகம்

சென்னை, ஆக. 9: மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக, ரூ15 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் அருகில் பிரமாண்டமான வணிக வளாகம் கட்டப்படுகிறது. இந்த பணி விரைவில் முடியவுள்ளது.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக் குழு இயக்கத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு அமைப்பான, ‘தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழு நலச் சங்கம்கொண்டு வரப்பட்டுள்ளது.

அவர்கள் உற்பத்தி செய்யும் ஊறுகாய், வற்றல், உடனடி சமையலுக்கு தேவையான மசாலா பொடிகள், பொம்மைகள், கண்கவர் பிளாஸ்டிக் மணிகள், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை, ஒரே வளாகத்தில் சந்தைப்படுத்தி, விற்பனைக்கான வாய்ப்பை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சுனாமி அவசர கால உதவி திட்டத்தின், சிறப்பு திட்டமாக உள்கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் ரூ15.32 கோடி செலவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வளாகம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் கட்டப்பட்டு வருவதாக, சட்டப் பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த போது துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி, வள்ளுவர் கோட்டம் அருகில் மகளிர் சுய உதவி குழுக்களுக்காக கட்டப்படும் வணிக வளாக கட்டிடப் பணியை, சுனாமி திட்ட செயலாக்க அலகு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த கட்டிடம் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் 65 ஆயிரம் சதுர அடியில் உருவாகிறது. இந்த பணி, கடந்த ஆண்டு ஜன வரியில் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதமே முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப் போதுதான் பணி முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. தீபாவளிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று சுனாமி திட்ட செயலாக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வளாகத்தில் பொங்கல், தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சி நடத்தப்படும் என்றும், சுய உதவிக் குழுவினருக்கு குழுவை வழி நடத்திச் செல்லும் தலைமைப் பண்பு, குழுவாக செயல்படும் திறன், பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சி அளிக்கும் பணிகளும், இந்த வளாகத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரூ15 கோடியில் உருவாகிறது

 

சுரண்டையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

Print PDF

தினமணி 06.08.2010

சுரண்டையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

சுரண்டை, ஆக. 5: சுரண்டையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி மூலம் கடனுதவியும், பேரூராட்சி மூலம் சுழல்நிதியும் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சுரண்டை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர்

. கோமதிபழனி தலைமை வகித்தார். பேரூராட்சி நிர்வாக அதிகாரி ம. சாமுவேல் துரைராஜ், சுரண்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் சாமுவேல் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எஸ். பழனி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கடனுதவியும், ரூ.25 ஆயிரம் சுழல்நிதியையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத் தலைவர் ப. ராமர், பேரூராட்சி உறுப்பினர்கள் எஸ்.கே.டி. ஜெயபால், . சீனிவாசன், அருணாசலக்கனி, ராஜேந்திரன், கல்பனா அன்னப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மத்திய அரசு திட்டம் குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி முகாம்

Print PDF

தினகரன் 06.08.2010

மத்திய அரசு திட்டம் குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி முகாம்

பொள்ளாச்சி, ஆக 6: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மத்திய அரசின் திட்டம் குறித்து விளக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சிமுகாம் நேற்று துவங்கியது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள வெண்ணிலா திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான 2 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இப்பயிற்சியினை அளிக்கும் விழுப்புரம் மாவட்டத்தைசேர்ந்த ரிவார்டு சொசைட்டி எனும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் என் பவர் கூறியதாவது:

மத்திய அரசு சார்பில் பொன் விழா சுயவேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள், பேரூராட்சி மற்றும் நகர் புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் சுயமாக தொழில் துவங்க மத்திய அரசு 75 சதவிகித நிதியையும், மாநில அரசு 25 சதவிகித நிதியையும் வழங்குகின்றன.இத்திட்டம் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தப் படுகிறது. தற்போது, பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கென முதல்கட்ட நடவடிக்கை யாக பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

பொள் ளாச்சி வட்டாரத்தில் உள்ள ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர், கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், ஒடையகுளம் ஆகிய 7 பேரூராட்சிகள், கிணத்துக்கடவு, பெரிய நெகமம், செட்டிபாளையம் மற்றும் ஒத்தக்கால்மண்டபம் ஆகிய 4 பேரூராட்சிகள் என மொத்தம் 11 பேரூராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான 2 நாள் பயிற்சி துவங்கியுள்ளது.

இதில் மத்திய அரசின் இத்திட்டத்தின் நோக்கம், செயல்பாடு, இதன் மூலம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கிடைக்கும் பயன்கள் உள்ளிட்டவை குறித்து தெளிவாக விளக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுவிலும் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுத்து பேரூராட்சிக்கு 6 பிரதிநிதிகள் என 66 மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகளுக்கு பயற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இரண்டாவது நாளான இன்றும் இப்பயிற்சி நடைபெறுகிறது.

 


Page 18 of 41