Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

மகப்பேறு நலத்திட்ட நிதியுதவி வழங்கல்

Print PDF

தினமலர் 18.08.2010

மகப்பேறு நலத்திட்ட நிதியுதவி வழங்கல்

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியில் மகப்பேறு நலத் திட்ட நிதியுதவியை சேர்மன் பூபாலன் வழங்கினார். திண்டிவனம் நகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட 469 கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் மூலம் 16 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பயனாளி களிடம் நகர் மன்ற சேர்மன் பூபாலன் வழங்கினார். நகராட்சி ஆணையாளர் முருகேசன், கவுன்சிலர்கள் ராஜசக்தி, அப்பாஸ் மந்திரி, முரளிதரன், வெங்கடே சன், ஞானவேல், ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

988 மகளிருக்கு மகப்பேறு நிதி உதவி

Print PDF

தினமணி 16.08.2010

988 மகளிருக்கு மகப்பேறு நிதி உதவி

பவானி,ஆக.​ 15: பவானி நகராட்சிப் பகுதியில் வசிக்கும் மகளிர் 988 பேருக்கு ரூ42.86 லட்சம் மகப்பேறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பவானி நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா,​​ ஆணையர் ​(பொ)​ பழனிச்சாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.​ நகர்மன்றத் தலைவர் எம்.ஆர்.துரை தேசியக் கொடியேற்றினார்.​ பவானி கூடல் ரோட்டரி சங்க நிர்வாகி சரவணன்,​​ நுகர்வோர் சங்க நிர்வாகி வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.

சுகாதார ஆய்வாளர் கே.பேச்சிமுத்து வரவேற்றார்.​ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 20 மகளிருக்கு ரூ1.20 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும்,​​ கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பவானி நகராட்சியைச் சேர்ந்த 988 மகளிருக்கு ரூ6 ஆயிரம் வீதம் ரூ42.86 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது என விழாவில் தெரிவிக்கப்பட்டது.

நகர்மன்ற உறுப்பினர்கள் கு.செல்வராஜ்,​​ வரதராஜ்,​​ பாலமுருகன்,​​ அண்ணாமலை,​​ கணேசன்,​​ நகராட்சிப் பள்ளித் தலைமையாசிரியை வைஜெயந்தி பங்கேற்றனர்.​ மாணவ,​​ மாணவியரின் சுதந்திர தின கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

தி.மலை நகராட்சி சார்பில் மகளிர் குழுவினர் சுற்றுலா

Print PDF

தினகரன் 09.08.2010

தி.மலை நகராட்சி சார்பில் மகளிர் குழுவினர் சுற்றுலா

திருவண்ணாமலை, ஆக.9: திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் 200 பேர் தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர்.

திருவண்ணாமலை நகராட்சியில் 169 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுக்களின் தலைவிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சுவர்ண ஜெயந்தி திட்ட மேம்பாட்டு சுற்றுலாவுக்காக தருமபுரி மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சுற்றுலா வாகனத்தை நகராட்சித் தலைவர் இரா.திருமகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையாளர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், சுற்றுலா குழுவினருடன் நகராட்சித் தலைவர் இரா.திருமகன், பொறியாளர் சந்திரன், அலுவலக மேலாளர் கணேசன், கவுன்சிலர் குட்டி புகழேந்தி, முன்னாள் கவுன்சிலர் சேட்டு முருகேசன் ஆகியோரும் சென்றனர்.

தருமபுரி நகராட்சியில் நடைபெறும் மகளிர் குழுவினருக்கான நெசவு பயிற்சியை குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

 


Page 17 of 41