Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சிகளில் மகப்பேறு மையங்கள்

Print PDF

தினமணி 24.08.2010

மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சிகளில் மகப்பேறு மையங்கள்

தூத்துக்குடி, ஆக. 23: தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 10 ஊராட்சிகளிலும மகப்பேறு மையங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

நகராட்சியாக இருந்த தூத்துக்குடி நகரம் கடந்த 5.8.2008 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை முதல்வர் மு. கருணாநிதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு|ரூ| 5 கோடியில் புதிய கட்டடம் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார். கட்டடப் பணிகள் முடிந்த நிலையில் புதிய மாநகராட்சி அலுவலகத்தை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் 5.8.2010-ல் திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக புதிய கட்டட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் முதலாவது மாமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தலைமை தாங்கினார்.

துணை மேயர் ஜே. தொம்மை ஜேசுவடியான், பொறியாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பெ. கீதா ஜீவன் பேசியதாவது:

தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்று உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தோம். அதன்படி தூத்துக்குடியை மாநகராட்சியாக முதல்வர் கருணாநிதி தரம் உயர்த்தினார்.

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன.

இதற்காக |ரூ| 10 கோடி நிதி கோரியுள்ளோம். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அந்த நிதியை ஒதுக்கீடு செய்வார்கள் என நம்புகிறோம். மேலும், 1-ம் கேட், 2-ம் கேட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சுரங்கப்பாதை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 10 ஊராட்சிகளுக்கு தற்போது தாற்காலிகமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

விரைவில் நிரந்தர குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த ஊராட்சிகளில் வரிவசூல் மையம், மகப்பேறு மையங்கள் அமைக்கப்படும். மேலும், மாநகராட்சி சார்பில் மண்டல அலுவலகங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த ஆண்டும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு |ரூ| 1.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன் என்றார் அவர். தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 24 August 2010 09:58
 

4 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

Print PDF

தினமலர் 24.08.2010

4 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சியில் 4 வது கட்டமாக 283 கர்ப்பிணிகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப் பட்டது.

நகராட்சி தலைவர் நடராஜன் கூறியதாவது: திண்டுக்கல் நகராட்சியில் துப்புரவு பணிகள் நன்றாக நடந்து வருகிறது. விரைவில் குப்பை இல்லாத நகரம் என்ற பெயரை எடுப்போம் தரம்குறைந்த பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் யாராவது பயன்படுத்தினால் மக்கள் தகவல் தெரிவிக்கலாம். ஆத்தூர், காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளால் குடிநீர் தேவை பற்றாக்குறையாக உள்ளது.வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத் திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு விட்டன. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் விடுபட்டு இருந்தால் உடனடியாக தொடர்பு கொண்டு பெற் றுக் கொள்ளலாம். தற்போது 283 கர்ப்பிணிகளுக்கு 16 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. இதுவரை 4 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை வழங்கப் பட்டுள் ளது. இவ்வாறு அவர் பேசினார். கமிஷனர் லட்சுமி, கவுன்சிலர்கள் மார்த் தாண்டன், ரபிக், சேகர், ரஜினிகாந்த், சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

கர்ப்பிணிகளுக்கு அரசு நிதியுதவி நகராட்சி தலைவர் வழங்கினார்

Print PDF

தினகரன் 19.08.2010

கர்ப்பிணிகளுக்கு அரசு நிதியுதவி நகராட்சி தலைவர் வழங்கினார்

பொள்ளாச்சி, ஆக 19: பொள்ளாச்சி நகராட்சி சார்பில் 124 கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு அரசின் நிதி உதவி நேற்று வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சி சார்பில் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு அரசின் நிதி உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நாச்சிமுத்து நகராட்சி பிரசவ விடுதி வளாகத்தில் ஆணை யாளர் வரதராஜ் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினார். இதில் முன் னாள் எம்.எல்.. ராஜூ, நகராட்சி பொறியாளர் மோகன், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி கூறியதாவது:

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்பு மூன்று மாதங்களுக்கு ரூ. 3 ஆயிரம், பிரசவத்துக்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ரூ. 3 ஆயிரம் என மொத்தம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சிறப்பான ஒரு திட்டத்தை அறிவித்தார். கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் பெற்றெடுத்து வளர்க்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் இந்த நிதி உதவியைப் பெற 190 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 66 பயனாளிகளுக்கு கடந்த 15ம் தேதி சுதந்திர தின விழாவின் போது நிதி உதவி வழங்கப்பட்டது. தற்போது 124 பயனாளிகளுக்கு இந்தி நிதி வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 98 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சி பிரசவ விடுதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசவங்களும் சிறந்த முறையில் நடைபெறுகிறது. ஆகவே கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


Page 16 of 41