Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

200 பெண்களுக்கு மகப்பேறு உதவித் தொகை

Print PDF

தினமணி 21.10.2010

200 பெண்களுக்கு மகப்பேறு உதவித் தொகை

மதுரை, அக். 20: மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு நாள் முகாமில் 200 பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் வழங்கினார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.. அழகிரி உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து சிறப்பு மக்கள் தொடர்பு நாள் முகாம்களை நடத்தி வருகின்றன. மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை இம்முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பேசுகையில், முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

முகாமில் மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் பேசுகையில், மக்களைத் தேடி என்ற இச்சிறப்பு மக்கள் தொடர்பு நாள் முகாம் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாகப் பெற்று வருகிறோம். அலுவலர்கள் அனைவரும் மக்களைத் தேடிச் சென்று மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

இச்சிறப்பு முகாமில் 200 நபர்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுஉதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி முன்னிலை வகித்தார். துணை மேயர் பி.எம். மன்னன், மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ், வடக்கு மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து, நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், வடக்கு வட்டாட்சியர் அர்ச்சுனன், மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ரா. பாஸ்கரன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ரா.அண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

5 கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை

Print PDF

தினமணி 19.10.2010

5 கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை

தக்கலை, அக். 18:பத்மநாபபுரம் நகராட்சி மக்கள் குறைதீர் நாளில் 5 கர்ப்பிணிகளுக்குத் தலா ரூ. 6 ஆயிரம் வீதம் உதவித்தொகையை நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் வழங்கினார். இந்த நகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் முகாம் கடந்த 18-ம்தேதி தொடங்கி ஒவ்வொரு வார்டிலும் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் குறைகள் குறித்து அறியவும், நகராட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள், சலுகைகள் கிடைக்கவும், முதல் கட்டமாக நகராட்சிக்கு உள்பட்ட 1 மற்றும் 8-வது வார்டில் திங்கள்கிழமை குறைதீர் நாள் நடைபெற்றது.

சாரோடு சி.எஸ்.. சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாளில் 8-வது வார்டு மக்கள் பொது நல்லி வேண்டுமென கோரினர். 1-வது வார்டு மக்கள் தங்கள் பகுதியிலுள்ள பகுதி நேர ரேஷன் கடையை முழுநேரக் கடையாக மாற்ற வேண்டுமெனக் கோரினர். மேலும் தெருவிளக்கு வசதி வேண்டும். முதியோர், விதவைகள் உள்பட 20 பேர் தங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் கூறுகையில், மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆணையர் செல்லமுத்து, துணைத் தலைவர் முகமது சலீம், நகர்மன்ற உறுப்பினர்கள், மகப்பேறு உதவியாளர் அன்னகுட்டி, சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் மோகன் மற்றும் மில்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

வீரப்பன்சத்திரம் நகராட்சியில் உதவித்தொகை வழங்கல்

Print PDF

தினமலர் 19.10.2010

வீரப்பன்சத்திரம் நகராட்சியில் உதவித்தொகை வழங்கல்

ஈரோடு: வீரப்பன்சத்திரம் நகராட்சியில் மகப்பேறு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்க்கரசி வரவேற்றார். நகராட்சி தலைவர் மல்லிகா நடராஜன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராஜா மகப்பேறு உதவித்தொகை வழங்கினார். துணைத் தலைவர் செல்வராஜ், கவுன்சிலர்கள் ரவி, ராதாருக்குமணி, மகேந்திரன், தி.மு.., பிரமுகர்கள் நடராஜன், வக்கீல் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார். விழாவில் 29 பேருக்கு தலா 6,000 ரூபாய் மகப்பேறு உதவித்தொகை, மூன்று பேருக்கு தலா 400 ரூபாய் முதியோர் உதவித்தொகை, இரண்டு பேருக்கு தலா 400 ரூபாய் ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.

 


Page 13 of 41