Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

உள்ளாட்சி தினவிழா 22 மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி

Print PDF

தினமணி                 02.11.2010

உள்ளாட்சி தினவிழா 22 மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி

திருப்பூர், நவ. 1: உள்ளாட்சி தினத்தையொட்டி திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் 22 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி தினவிழா திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார்.

துணைமேயர் கே.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி வரவேற்றார்.

உள்ளாட்சி தினத்தையொட்டி திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு புதிய சீருடைகளும், பாதாள சாக்கடைத் திட்ட பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் பயிற்சிகள் பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 22 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5.46 லட்சமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவுத் திட்டத்தின் கீழ் 320 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 16.83 லட்சம் மகப்பேறு நிதியுதவியும் வழங்கப்பட்டது. அவற்றை மேயர் க.செல்வராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழாவில், மன்றக்குழுத் தலைவர்கள் சா.பழனிசாமி, வி.ராதாகிருஷ்ணன், ஜி.ஈஸ்வரமூர்த்தி, பி.ஆர்.நடராஜன், எம்.ராதாமணி, எஸ்.சாந்தாமணி, எம்..கலிலூர்ரகுமான், சு.சிவபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகர பொறியாளர் கே.கௌதமன் நன்றி கூறினார்.

முன்னதாக, திருப்பூர் மாநகராட்சியில் இருந்து துவங்கிய உள்ளாட்சி தினப் பேரணி பார்க் சாலை வழியாக ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியை அடைந்தது. இதில், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

பொள்ளாச்சியில் உள்ளாட்சி தின விழா சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி

Print PDF

தினமலர்                 02.11.2010

பொள்ளாச்சியில் உள்ளாட்சி தின விழா சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி உள்ளாட்சி தினத்தை ஒட்டி மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி, கமிஷனர் பூங்கொடி அருமைக்கண் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சுகாதாரம், மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுவினரும், துப்புரவு தொழிலாளர்களும் அறிவிப்புகளை ஏந்தி பேரணியாக சென்றனர். நியூஸ்கீம் ரோடு, காந்திசிலை, பஸ் ஸ்டாண்ட் ரோடு வழியாக சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

நகராட்சி அலுவலகத்தில் நடந்த உள்ளாட்சி தினவிழாவில், கமிஷனர் வரவேற்றார். நகராட்சிக்கு சொந்தமான நாச்சிமுத்து மகப்பேறு மருத்துவமனையில் 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கு, 26.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடப்பட்ட நவீன ஆடுவதைக்கூடம் ஆகியவற்றை நகராட்சி தலைவர் திறந்து வைத்தார். நகராட்சி பகுதிகளுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை முன்னாள் எம்.எல்.., ராஜூ துவக்கி வைத்தார்.

நான்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்பட்டது. மகப்பேறு உதவி திட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் 25 பேருக்கு 1.25 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பரிசும், சான்றும் வழங்கப்பட்டது. விழாவில், நகராட்சி பொறியாளர் மோகன், நகரமைப்பு அலுவலர் வரதராஜன், நகர் நல அலுவலர் குணசேகரன், தி.மு.., காங்., கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

 

உள்ளாட்சி தின விழாவில் 69 கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி நகராட்சி தலைவர் வழங்கினார்

Print PDF

தினகரன்                  02.11.2010

உள்ளாட்சி தின விழாவில் 69 கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி நகராட்சி தலைவர் வழங்கினார்

குன்னூர், நவ.2:உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு குன்னூர் நகராட்சி வளாகத்தில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் ஆனந்தகுமார், ஜெகநாதன், அனீபா, சார்லி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூமாலை வரவேற்றார். நிகழ்ச்சியில் 69 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சத்து 14 ஆயிரம் வழங்கி நகராட்சி தலைவர் ராமசாமி பேசுகையில், ‘கடந்த 4 ஆண்டுகளில் ரூ.37 கோடி மதிப்பில் நடைபாதை, தெரு விளக்கு, சாலை சீரமைப்பு, தடுப்பு சுவர், குடிநீர் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்காக நிதி செலவிடப்பட்டுள்ளது.

மேலும் ரூ.20 கோடி அளவிற்கு நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் இந்த நிதியும் கிடைக்க பெற்று மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். நகர பகுதியில் இலவச கலர் டிவி, சமையல் எரிவாயு இணைப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நல திட்ட உதவிகள் 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் விடுபட்ட பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்படும். கர்ப்பிணிகள் 2 ஆயிரம் பேருக்கு இதுவரை ரூ.12 லட்சம் வரை உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடனுதவி மற்றும் மானிய தொகை என ரூ.20 லட்சத்திற்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.

நகரை மேம்படுத்த நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார். இதில், கவுன்சிலர்கள் முருககுமார், அந்தோணிராஜ், சாந்தா, பார்வதி, மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 12 of 41