Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் அறிவிப்பு

Print PDF

 தினமணி            21.09.2016

பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் அறிவிப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நகராட்சி பதவிகள் குறித்த இடவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கான உத்தரவு தமிழக அரசிதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சிபுரம் ஆகிய நகராட்சிகள் பொதுவானதாகும்; அதாவது ஆண்-பெண் இரு பாலரும் போட்டியிடக் கூடியதாகும்.

செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய நகராட்சிகளில் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உரிய (பொது) நகராட்சியாக மறைமலைநகர் இடம்பெற்றுள்ளது. இதே போன்று பிற நகராட்சி பதவிகள் குறித்த இட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

மதுரையில் ஐந்தாயிரம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: டிச.30-ல் விழா

Print PDF

  தினமணி       23.12.2014

மதுரையில் ஐந்தாயிரம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்:

டிச.30-ல் விழா

மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 5,000-ம் ஏழை பெண்களுக்கு அரசு சார்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் டிசம்பர் 30-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர், மாநகராட்சி சார்பில் 4,000-ம் பேருக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1,000-ம் பேருக்கும், ஆக மொத்தமாக 5,000-ம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கி வாழ்த்திப் பேசுகின்றனர்.

இவ்விழாவுக்கு மேயர் விவி ராஜன்செல்லப்பா தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையாளர் சி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணை மேயர், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், மாவட்ட சமூக நலத்துறையினர் பங்கேற்கின்றனர்.

 

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி

Print PDF

தினமணி      04.09.2014

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி


    புகைப்படங்கள்

மாநகராட்சி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து பார்வையிட்ட (இடமிருந்து) துணை ஆணையர் (சுகாதாரம்) ஆனந்த், மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பென்ஜமின்.

மாநகராட்சி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து பார்வையிட்ட (இடமிருந்து) துணை ஆணையர் (சுகாதாரம்) ஆனந்த், மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பென்ஜமின்.

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்தி:

அறுவை சிகிச்சை பிரசவங்களே தற்போது அதிக அளவில் நடைபெறுகின்றன. யோகா பயிற்சியால் கர்ப்பிணிப் பெண்களின் இடுப்பு எலும்பு தசைகள் வலுப்பெறுவதுடன், மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சுகப் பிரசவ வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நிகழ் நிதியாண்டின் மாநகராட்சி பட்ஜெட்டில், சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக யோகா பயிற்சியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடபழனியில் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையில் இலவச யோகா பயிற்சித் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

அனைத்து மண்டலங்களிலும் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையில் பிரதி செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை தகுதியான ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி இலவச யோகா பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், சம்பந்தபட்ட மண்டலங்களிலுள்ள மகப்பேறு மருத்துவமனை அலுவலரை அணுகலாம்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 41