Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

பூங்காக்களுக்கு சமையலறை கழிவு நீர்

Print PDF
தினமணி        04.06.2013

பூங்காக்களுக்கு சமையலறை கழிவு நீர்


சமையலறை கழிவு நீரை மறுசுழற்சி செய்து, அதை அந்தந்த காலனி பூங்காக்களின் பராமரிப்புப்புக்குப் பயன்படுத்தும் வகையிலான திட்டத்தை முதல்வர் ஷீலா தீட்சித் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

வசந்த் குஞ்ச், பாக்கெட் சி-9 காலனியில் இத்திட்டத்தை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:

மாநில அரசின் "தில்லி பார்க்ஸ் அண்ட் கிரீன் சொûஸட்டி' ஆதரவுடன் சோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி குடியிருப்பு நலச் சங்கம் இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது.

மழைநீரைச் சேமித்து அதை பூங்காங்களுக்குப் பயன்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் வேகமாக குறைந்துவரும் சூழலில் இது போன்ற திட்டங்கள் நிலத்தடி நீரை தக்க வைப்பதுடன், மழைநீரைச் சேமிக்கவும் உதவிடும்.

தில்லியில் உள்ள அனைத்து காலனிகளிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த குடியிருப்போர் சங்கங்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஷீலா தீட்சித் பேசினார்.

நிகழ்ச்சியில் தில்லி சட்டப் பேரவைத் தலைவர் யோகானந்த் சாஸ்திரி, ரமேஷ் குமார் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

கழிவுநீரை சுத்தம் செய்யும் திட்டம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு நகராட்சி சேர்மன் தகவல்

Print PDF
தினமலர்       22.05.2013

கழிவுநீரை சுத்தம் செய்யும் திட்டம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு நகராட்சி சேர்மன் தகவல்


திருச்செங்கோடு: ""கழிவுநீரை சுத்தம் செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில், கழிவுநீர் மேலாண் திட்டத்தில், 150 கோடி ரூபாய் மதிப்பில், கருத்துரு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என, கவுன்சில் கூட்டத்தில், நகராட்சி சேர்மன் சரஸ்வதி கூறினார்.

திருச்செங்கோடு நகராட்சி கவுன்சில் கூட்டம், அதன் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சேர்மன் சரஸ்வதி தலைமை வகித்தார். கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

நகராட்சியில் குடிநீர் அபிவிருத்திக்காக, 7.50 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்த, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நகராட்சிக்கு உட்பட்ட, 33 வார்டுகளிலும், வறட்சியை கருத்தில் கொண்டு, ஆழ்துளை குழாய் கிணறு அமைத்த, நகராட்சி சேர்மன் சரஸ்வதிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:

சக்திவேல் (அ.தி.மு.க.,): கூட்டப்பள்ளி ஏரியை தூர்வாரினால், மழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்க ஏதுவாக இருக்கும்.

கார்த்திகேயன் (அ.தி.மு.க.,): குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டால் சரிசெய்ய பணியாளர்கள் வருவதில்லை. புதிய இணைப்புகள் கொடுக்க ஆர்வமாக வரும் பணியாளர்கள், பழுது நீக்கம் செய்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

சரஸ்வதி (சேர்மன்): உடனடியாக பழுதுகள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவி (அ.தி.மு.க.,): கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேர்மன்: அடுத்த கூட்டத்திற்குள் அடையாள அட்டை வழங்கப்படும். புதுடில்லி மாநகராட்சி பகுதிகளில், பாதள சாக்கடை திட்டத்தின் மூலம், கழிநீரை எவ்வாறு அகற்றுகின்றனர், அவற்றை எப்படி சுத்தம் செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர் என்பதை நேரில் சென்று பார்வையிட்டோம்.

அந்த சிறப்பான திட்டத்தை, திருச்செங்கோட்டிலும் கழிவுநீர் மேலாண் திட்டத்தில் செயல்படுத்த, 150 கோடி ரூபாய்க்கு கருத்துரு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிபாளையம் சாலையில் உள்ள வாரச்சந்தையில், 20 கோடி ரூபாய் மதிப்பில், வணிக வளாகம், தினசரி மார்கெட்டில், 12.50 கோடி ரூபாயில் கடை மற்றும் வணிக வளாகம் கட்டவும், கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
 

நகராட்சி வளாகத்தில் குடிநீர் வசதி

Print PDF
தினமணி       02.05.2013

நகராட்சி வளாகத்தில் குடிநீர் வசதி


திண்டிவனம் நகராட்சி வளாகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

அதற்காக ரூ.1.30 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை நகர் மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தார்.  நிகழ்ச்சியின் போது ஆணையர் அண்ணாதுரை, பொறியாளர் வெங்கடேசன், மேலாளர் கிருஷ்ணராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தனன், முரளிதாஸ் உள்பட நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
 


Page 3 of 28