Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

153 பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி

Print PDF

தினமலர் 05.05.2010

153 பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் 153 கிராமப்புற அரசு பள்ளிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.30 லட்சம் செலவில் 'குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்' அமைக்கப்பட உள்ளது.இளைய தலைமுறையினருக்கு நல்ல குடிநீர் வழங்குவதற்காக பள்ளிகள் தோறும் 'குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்' அமைக்கும் பணியை தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் மத்திய அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வகையான அரசு பள்ளிகளிலும் தூய குடிநீர் வழங்கும் வகையில் ரூ.20 ஆயிரம் செலவில் 'குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்' தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 14 யூனியன்களிலும் கடந்த 2 ஆண்டுகளாக கிராமப்புற பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய அரசின் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுத்தமான, சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் 'குட

நீர் சுத்திகரிப்பு கருவி' அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கிராமப்புறங்களில் உள்ள 78 பள்ளிகளில் தலா ரூ.20 ஆயிரம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2009-10ம் நிதியாண்டிலும் 78 கிராமப்புற பள்ளிகளில் தலா ரூ.20 ஆயிரம் செலவில் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செயப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை சுமார் 50 பள்ளிகளில் இந்த சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 28 பள்ளிகளிலும் வரும் ஜூன் 15ம் தேதிக்குள் அமைக்கப்படும். அடுத்தக்கட்டமாக 153 பள்ளிகளில் ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை அமைப்பதற்கான ஆணைகள் பிறப்பித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு அடுத்த வாரத்திற்குள் டெண்டர் விட்டு இறுதி செய்யப்படும். அதன்பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 153 பள்ளிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்படும். இப்பணிகளை மேற்கொள்ள இந்தாண்டு அக்டோபர் மாதம் வரை காலக்கெடு உள்ளது. எனினும் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளே 153 பள்ளிகளிலும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதேபோல வரும் 2 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தின் 14 யூனியன்களிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் மைக்கப்பட்டு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தூய குடிநீர் வழங்கப்படும் என்றார்.குடிநீர் வடிகால் வாரிய தொழில்நுட்ப பணியாளர்கள் கூறுகையில், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் மாணவர்களை பாதிக்காத வகையில் குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்படும் சுத்திகரிப்பு இயந்திரம் புற ஊதாக் கதிர்வீச்சின் மூலம் செயல்படுவதாகும். பள்ளியின் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து வரும் குழாயில் இந்த சுத்திகரிப்பு இயந்திரம் இணைக்கப்படும். இதன்மூலம் குடிநீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் இந்த கருவிக்குள் சென்று சுத்திகரிக்கப்பட்டு அதன்பிறகு குடிநீர் குழாய்கள் மூலம் இந்த கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிக்குச் செல்லும். அதிலிருந்து பிடித்து மாணவ, மாணவிகள் குடிநீரை பருகலாம். இந்த திட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் மதிப்பில் புற ஊதாக்கதிர்கள் மூலம் செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், சின்டெக்ஸ் டேங்க், அதை வைப்பதற்கான ஸ்டாண்ட், வீணாகும் தண்ணீரை பிடிக்க வாளி, குழந்தைகள் தண்ணீர் குடிக்க டம்ளர்கள் என்று அனைத்து பொருட்களும் அடங்கிய ஒரு செட் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தூய குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது என்றனர்.

பராமரிப்பு அவசியம்
அரசின் முயற்சியால் பள்ளிகளில் இந்த கருவிகள் அமைக்கப்பட்டாலும் தொடர்ந்து அவை மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் அவற்றை பராமரிப்பது மிக மிக அவசியமாகும். எனவே, அதற்கான பொறுப்பை பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் மாணவ, மாணவிகள் தாங்களே முன் வந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இது குடிநீர் வடிகால் வாரியத்தினரின் கருத்து.

Last Updated on Wednesday, 05 May 2010 06:12
 

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூனில் நிறைவடையும்: மு.க.ஸ்டாலின்

Print PDF

தினமணி 24.04.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூனில் நிறைவடையும்: மு..ஸ்டாலின்

சென்னை, ஏப்.23: கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூன் மாதத்துக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று சட்டப் பேரவையில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவாதத்தில் அதிமுக எம்.எல்.., கே.பி. அன்பழகன் பேசியது:

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் படி 2009-ம் ஆண்டில் சென்னைக்கு தினசரி 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வர இருக்கிறது என்று பேரவையில் அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று நிலைமை என்ன?

அப்போது, ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசியது:

மீஞ்சூர் அருகே காட்டுப்பாக்கம் கிராமத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அதிமுக ஆட்சியிலேதான் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில வழக்குகளின் காரணமாக அந்தப் பணி அன்றைக்குத் தடைப்பட்டு, தொடங்க முடியாத நிலையிலே இருந்து வந்தது.

இதை அதிமுக தொடங்கிய திட்டம் கிடப்பிலே போட்டுவிடவில்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையைப் தீர்க்கக் கூடிய வகையிலே இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி எங்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையிலே நான் சொன்னது உண்மைதான். ஆனால், அந்தப் பகுதியில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவதால், தொழில்நுட்ப ரீதியாக அந்தப் பணியை நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டது.

இந்தத் திட்டத்தில், சென்னைக் குடிநீர் வாரியத்தைப் பொருத்தவரையில், அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக அரசுக்கும், வாரியத்துக்கும் எந்தவித இழப்பும் இல்லை.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பலமுறை நேரடியாகச் சென்று ஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ளோம்.

வரும் ஜூன் மாதம் இறுதியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். அதன்மூலம் சென்னை மாநகர மக்களுக்கு தினசரி 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Last Updated on Saturday, 24 April 2010 08:56
 

திருவெறும்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு, பராமரிப்பு பயிற்சி முகாம்

Print PDF

தினமணி 13.04.2010

திருவெறும்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு, பராமரிப்பு பயிற்சி முகாம்

திருவெறும்பூர், ஏப். 12: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீர் இயந்திரம் செயல்முறை மற்றும் குடிநீர் பராமரிப்புப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமை திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சித்ரா தொடக்கிவைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருச்சி உதவி நிர்வாகப் பொறியாளர்கள் செ. அறிவழகன், ஆர். வெங்கடேசன், பி. மாரியப்பன், பாண்டியன், நீர் தர ஆய்வாளர் டி. பென்ஸôமேரி ஆகியோர் பயிற்சியளித்தனர்.

பயிற்சியில் திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 26 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

Last Updated on Tuesday, 13 April 2010 09:53
 


Page 20 of 28