Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கட்டமைப்பு சோதனை இயக்கம்

Print PDF

தினமலர் 03.06.2010

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கட்டமைப்பு சோதனை இயக்கம்

சென்னை : கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின், கட்டமைப்பு சோதனை இயக்கத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:சென்னை நகரின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் துவக்கப்பட்டது. இதற்கு, கடந்த 2007ம் ஆண்டு, பிப்ரவரி 25ம் தேதி, ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிலையத்தின் அனைத்து பணிகளும், தற்போது முடிந்துள்ளன.இதையடுத்து, செயல்திறன் சோதனைக்கான, சான்றிதழ் வழங்கியபின், இந்நிலையத்திலிருந்து, குடிநீர் கொண்டு வரப்படும். இப்பணிகள், இம்மாத இறுதிக்குள் முடிவடையும்.காட்டுப்பள்ளியிலிருந்து, சென்னை நகருக்கு, குடிநீரை கொண்டு செல்ல, தேவைப்படும் கட்டமைப்பு பணிகளை அமைக்க, 93 கோடி ரூபாயில், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு நிதி உதவியின் கீழ், 87 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒப்புதல் பெறப்பட்டது.அதன்படி, காட்டுப்பள்ளியில், 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட, கீழ்நிலைத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், மணலியில் 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலைத் தொட்டி, மாதவரத்தில் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலைத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், செங் குன்றத்தில் 6 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலைத் தொட்டி ஆகிய உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், 38 கிலோ மீட்டர் நீளத்திற்கு, குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டு, சென்னை நகரில், குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்கட்டமைப்புகளின் சோதனை இயக்கத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காட்டுப்பள்ளியில், துவக்கி வைத்தார்.

 

விழுப்புரத்தில் குடிநீர் தொட்டிகள் சுத்திகரிப்பு

Print PDF

தினமணி    28.05.2010

விழுப்புரத்தில் குடிநீர் தொட்டிகள் சுத்திகரிப்பு

விழுப்புரம், மே 27: விழுப்புரம் நகரில் உள்ள இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நகராட்சிகளின் இயக்குநர் அண்மையில் உத்தரவிட்டார்.

இதையொட்டி விழுப்புரம் நகரில் உள்ள குடிநீர் குழாய்களில் உள்ள நீரை உறிஞ்சி, குளோரின் மாத்திரைகள் செலுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள 9 லட்சம் மற்றும் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை ஓவர்சீயர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, குளோரின் கலக்கினர்.

 

மைசூர் மேயர் தகவல் ஏரிகள் அருகே சுத்திகரிப்பு மையம்

Print PDF

தினகரன்            26.05.2010

மைசூர் மேயர் தகவல் ஏரிகள் அருகே சுத்திகரிப்பு மையம்

மைசூர், மே.26: மைசூர் மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கும் ஏரிகளுக்கு அருகில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென மேயர் சந்தேஷ்சாமி தெரிவித்தார்.

மூன்று ஏரிகளையும் பர்வையிட்ட மேயர் செய்தியாளர்களிடையே கூறியதாவது: மைசூர் மாநகருக்கு குக்கரஹள்ளி, கரஞ்ஜி மற்றும் தால்வோகெரே ஆகிய ஏரிகளிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏரிகள் அனைத்தும் மாசடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளை அழைத்து சென்று ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து ஏரிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளுக்கு விரைவில் டெண்டர்கள் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும்.

சித்தார்த் லேஅவுட் அருகிலுள்ள கரஞ்சி ஏரி முழுவதும் சாக்கடையில் வரும் நீர் கல்ந்துள்ளது. இதனை உரிய ரசாயனக் கலவைகளுடன் சுத்தீகரிப்பு செய்து குடிநீராக விநியோகிக்கப்படூம். பொதுமக்களும் கழிவுகளை ஏரிகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது.

மாநகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான கால்வாய்கள் மூன்று மீட்டர் அகலம் கொண்டதாகும். இந்த பைப்லைன்கள் எரகானஹள்ளியிலிருந்து 2கிலோமீட்டர் மற்றும் எம்.ஆர்.சி காலனியிலிருந்து 4கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 19 of 28