Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

மீஞ்சூரில் 31ம் தேதி தொடக்கம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

Print PDF

தினமலர் 21.07.2010

மீஞ்சூரில் 31ம் தேதி தொடக்கம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

சென்னை, ஜூலை 21: மீஞ்சூர் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை நேற்று பார்வையிட்ட துணை முதல்வர் மு..ஸ்டாலின், இதை வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார் என்று தெரிவித்தார்.

ஐவிஆர்சிஎல் நிறுவனம், பெப்பிஷா நிறுவனம் இணைந்து சுமார் ^600 கோடி மதிப்பீட்டில், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணியை, கடந்த 2007 பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது, பணி முடிவடைந்துள்ளது. இதை, நேற்று காலை 9.30 மணிக்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் சென்னை மாநகரின் குடிநீர் பிரச்னை தீரும்" என்றார்.

பின்னர், விழா நடக்கும் இடத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, எல் அண்ட் 1397904493 நிறுவனத்தின்

ஆயிரம் கோடி மதிப்பிலான கப்பல் கட்டும் தளம், ராணுவ தளம், பெட்ரோல் எரிவாயு உபகரண மேடை ஆகியவற்றின் முதற்கட்ட பணிகளையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.

அவருடன் ஐஏஎஸ் அதிகாரிகள் சிவ்தாஸ் மீனா, அசோக் வர்தன் ஷெட்டி, சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஞான இளங்கோவன், கணேசன், யோகேஸ்வரன், அலாவுதீன், திருவள்ளூர் கலெக்டர் ராஜேஷ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பாஸ்கர்சுந்தரம், மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜ், பொன்னேரி நகர திமுக செயலாளர் சங்கர் ஆகியோர் இருந்தனர்.

 

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: 31-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

Print PDF

தினமணி 21.07.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: 31-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பொன்னேரி, ஜூலை 20: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை 31-ம் தேதி தமிழக முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைக்க உள்ளார் என துணை முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

÷சென்னையில் ஏற்படும் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூர் கடலோரம் அமைந்துள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் ரூ.2,300 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

÷இதையடுத்து கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து சென்னை நகருக்கு குடிநீர் விநியோகத்தை முதல்வர் மு.கருணாநிதி வருகிற 31-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

÷இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு வந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலை அதிகாரிகளிடம் திட்ட பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

÷பின்னர் வரும் 31-ம் தேதி முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் சென்னை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு அதே பகுதியில் தொடக்க விழா நடைபெறவுள்ள இடத்தை பார்வையிட்டார்.

÷இதையடுத்து செய்தியாளர்களிடம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது: கடல் நீரை குடிநீராக்கும் ஆலையின் திட்டப் பணிகள் முழுதும் முடிவடைந்துள்ளதால் 31-ம் தேதி சென்னை நகருக்கு குடிநீர் விநியோகத்தை முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார். ÷திருவள்ளூர் மாவட்ட ராஜேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.

 

கடலில் இருந்து குடிநீர் சென்னையில் 31ம் தேதி துவக்கம்

Print PDF

தினமலர்   21.07.2010

கடலில் இருந்து குடிநீர் சென்னையில் 31ம் தேதி துவக்கம்

பொன்னேரி : கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.சென்னை அடுத்த மீஞ்சூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வடிகால் வாரியமும், .வி.ஆர்.சி.எல்., என்ற இந்திய நிறுவனமும், பேபசா என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் இணைந்து கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில் ஈடுபட்டன.

துணை முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு இத்திட்டப் பணிகள் நடந்து வந்தன. இதற்காக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. துணை முதல்வர் அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வந்தார்.மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த திட்டப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதன் மூலம் தினமும் 10 கோடி லிட்டர் கடல்நீர் குடிநீராக மாற்றப்பட்டு, சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் சென்னை மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி வரும் 31ம்தேதி துவக்கி வைக்கிறார். துவக்க விழா ஏற்பாடுகள் குறித்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் குறித்தும், நேற்று காலை 9 மணிக்கு துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.திட்டப்பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் "கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் 31ம்தேதி தமிழக முதல்வரால் துவக்கப்படவுள்ளது.இதன் மூலம் சென்னை பெருநகர மக்களின் குடிநீர் தேவை முழு அளவில் பூர்த்தியடையும்' என்றார்.கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டப்பணிகளை பார்வையிட்டு, அங்கிருந்து 18,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செயற்கை துறைமுகம், ராணுவ தளம் மற்றும் கப்பல் கட்டும் தளம் ஆகிய பணிகளையும் அவர் பார்வையிட்டார்.அவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பி. ராஜேஷ், மாவட்ட போலீஸ் எஸ்.பி., வனிதா, பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன் மற்றும் வடிகால் வாரிய தலைமை பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 21 July 2010 06:13
 


Page 17 of 28